இதில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் கே மற்றும் பைட்டோநியூட்ரியண்ட்டுகள் போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்களும் வளமான அளவில் நிறைந்துள்ளன.
இதனை தினமும் ஒன்று சாப்பிடுவது உடலுக்கு நன்மையே தரும். தற்போது அவை என்னென்ன என்பதை தெரிந்து கொள்வோம்.
தினமும் ஒரு பச்சை மிளகாய் சாப்பிடுவதனால் கிடைக்கும் நன்மை என்ன தெரியுமா? | Health Benefits Of Green Chills
பச்சை மிளகாயில் கலோரிகள் குறைவு மற்றும் இது உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும். மெட்டபாலிசம் என்னும் செயல்முறையில் தான் உணவுகளானது உடலுக்கு தேவையான ஆற்றலாக மாற்றப்படுகின்றன. இதன் போது கலோரிகள் எரிக்கப்பட்டு, உடல் எடையை இழக்கச் செய்கின்றன.
பச்சை மிளகாயில் பீட்டா-கரோட்டின் உள்ளது. இது இதய செயல்பாட்டை முறையாக பராமரிக்க உதவுகிறது. மேலும் இது இரத்த கொழுப்பு மற்றும் ட்ரைகிளிசரைடுகளின் அளவையும் குறைக்க உதவி, பெருந்தமனி தடிப்பு ஏற்படுவதற்கான அபாயத்தைக் குறைக்கிறது. இதன் விளைவாக இதய நோயின் அபாயம் குறையும்.
பச்சை மிளகாய் சளி, ஜலதோஷத்திற்கு காரணமான தொற்றுக்களை அழிக்க உதவி, நல்ல நிவாரணத்தை அளிக்கும்.
பச்சை மிளகாயில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வைட்டமின் சி மற்றும் பீட்டா-கரோட்டின் உள்ளது. ஆனால் பச்சை மிளகாயை ஒரு டப்பாவில் போட்டு மூடி, குளிர்ச்சியான இடத்தில் வைத்தால் தான், அதில் உள்ள வைட்டமின் சி நீடித்திருக்கும். இல்லாவிட்டால், வெளிக்காற்று, சூடான மற்றும் சூரிய ஒளி படும் இடத்தில் வைத்தால், அதில் இருக்கும் வைட்டமின் சி குறைந்துவிடும்.
சர்க்கரை நோயைக் கொண்டவர்கள் பச்சை மிளகாயை உணவில் சேர்த்துக் கொண்டால், இரத்த சர்க்கரை அளவை சமநிலையில் பராமரிக்கலாம். இருப்பினும், சர்க்கரை நோய்க்கான மருந்து மாத்திரைகளை எடுக்கும் போது பச்சை மிளகாயை சாப்பிட்டால், இரத்த சர்க்கரை அளவு மிகவும் குறைந்து போக வாய்ப்புள்ளது. எனவே கவனமாக இருக்க வேண்டும்.