ear
மருத்துவ குறிப்பு

தாங்க முடியாத காது வலியா? இதோ அற்புதமான எளிய தீர்வு

வெற்றிலை சாப்பிட்டு முடித்ததும் பாட்டிமார்கள் போட்டுகொள்ளும் ஒரு பொருள் என்று தான் நாம் நினைத்திருக்கிறோம்.

ஆனால் வெற்றிலை கொண்டு பல வைத்தியங்களை பாட்டிமார்கள் செய்ததை பார்த்திருக்கிறோம்.

இதை சித்த மருத்துவமும், ஆயுர்வேத மருத்துவமும் கூட பரிந்துரைக்கிறது. வெற்றிலையின் மகத்துவமான நன்மைகள் என்னென்ன, எப்படி பயன்படுத்துவது என்பதை பார்க்கலாம்.

​வெற்றிலையின் மருத்துவ குணங்கள்

காயம் குணப்படுத்தும்

கொதிப்புகள், புண்கள், காயங்கள், மூக்கின் புண்களை குணப்படுத்த வெற்றிலை வெளிப்புறமாக பயன்படுத்தப்படுகிறது.

வெற்றிலை சாற்றை பிழிந்து காயத்தின் மேல் தடவி, அதன் மேல் புதிதாக பறிக்கப்பட்ட வெற்றிலை வைத்து மூடி வைக்கவும். காயம் மிக வேகமாக குணமாகும்.

கொப்புளங்கள் இருக்கும் போது வெற்றிலையை சூடாக்கி அதன் மேல் விளக்கெண்ணெய் தடவி எண்ணெய் தடவிய இலையை பாதிக்கப்பட்ட பகுதியில் வைத்தால் விரைவில் நிவாரணம் கிடைக்கும். ஒவ்வொரு சில மணி நேரத்திலும் இந்த இலையை மாற்றி எடுக்கவும்.

இது கொப்புளங்களை வெளியேற்ற உதவும். காயங்களை குணப்படுத்த சில வெற்றிலைகளைன் சாறை எடுத்து காயத்தின் மீது தடவி விடவும். அதன் மேல் வெற்றிலை இலையை மடக்கி கட்டவும். 2 நாட்களுக்கு ஒருமுறை செய்து வந்தால் காயம் விரைவில் ஆறும்.

​கண்களில் காயம், தொற்று, கண் பார்வை மேம்பட

கண்களில் காயம், தொற்று, பார்வைத்திறன் குறைபாடு இருந்தால் வெற்றிலை இலையின் சாற்றை தேனுடன் சேர்த்து அஞ்சனாக பயன்படுத்தப்படுகிறது. அல்லது கண் சொட்டு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.

சிவந்த கண்கள் மற்றும் கண்களில் அரிப்பு பிரச்சனை இருந்தால் 5 முதல் 6 வெற்றிலை இலைகளை 1 கப் தண்ணீரில் வைத்து கொதிக்க விட்டு குளிர்விக்கவும். இந்த நீரை கண்கள் கழுவ பயன்படுத்துங்கள்.

இது கண் சிவப்பை தடுக்கும். அரிப்பை வெளியேற்றும்.

தலைவலிக்கு மருந்தாகும் வெற்றிலை

வெற்றிலை குளிர்ச்சியாகவும் வலி நிவாரணி மருந்தாகவும் இருப்பதால் இது தலைவலிக்கு தீர்வு அளிக்கிறது. தலைவலிக்கு வெற்றிலை சாறை பற்று போடுவதன் மூலம் தற்காலிக வலி நிவாரணியாக செயல்படுகிறது.

​வீக்கமடைந்த மூட்டுகள்

மூட்டுகள் மற்றும் மூட்டுவலி வீக்கத்துக்கும் வெற்றிலை பயன்படுத்தப்படுகின்றன. வெற்றிலை சிறந்த வலி நிவாரணி ஆகும். இது வலியிலிருந்து உடனடி நிவாரணம் அளிக்கிறது.

மென்மையான வெற்றிலைகளை பேஸ்ட் ஆக்கி பாதிக்கப்பட்ட பகுதியில் தடவி விடவும்.

ஒரு கொத்து வெற்றிலைகளை காய்ச்சி, பாதிக்கப்பட்ட பகுதியில் தடவவும். மேலும் வெற்றிலையை சூடாக்கி பாதிக்கப்பட்ட எலும்புகள் மற்றும் மூட்டுகளில் இறுக்கமாக கட்டினால் வலியின் தீவிரம் மற்றும் மூட்டுவலி அறிகுறிகளை தணிக்கும்.

​காது வலிக்கு வெற்றிலை

வெற்றிலை சாறு அல்லது அதன் எண்ணெயில் சில துளிகள் தேங்காயெண்ணெயில் கலந்து காதில் விடுவதன் மூலம் காதுவலியை விரைவாக அகற்றிவிட முடியும்.

Related posts

உங்களுக்கு தெரியுமா ஆண்களின் மார்பக வளர்ச்சிக்கும், வழுக்கைத்தலைக்கும் இந்த உணவு தான் காரணம்!

nathan

இறந்தவர்கள் உங்களை பெயர் சொல்லி அழைப்பது போன்ற கனவு வந்தால் என்ன அர்த்தம்? என்று தெரியுமா ?

nathan

பலவித நோய்களுக்கு மருந்தாகும் கருஞ்சீரகத்தின் மருத்துவ பயன்கள்! இதோ உங்களுக்காக!!!

nathan

கூட்டுக் குடும்பத்தில் வசிப்பதால் கிடைக்கும் தீமைகள்!!!

nathan

உங்களுக்கு தெரியுமா பெண்களுக்கு ஏற்படுகின்ற கருப்பை புற்றுநோய்க்கான அறிகுறிகள் என்ன….?

nathan

60 வயதைத் தாண்டிய குழந்தைகளை எப்படி குஷிப்படுத்துவது?

nathan

தெரிந்துகொள்வோமா? குழந்தைகளுக்கு வரும் வயிற்று வலிக்கான சில வீட்டு வைத்தியங்கள்!

nathan

கெட்ட கனவுகள் ஏன் வருகின்றன? அதற்கும் உங்கள் வாழ்க்கைக்கும் என்ன தொடர்பு? விடைகள் இதோ படிங்க!!

nathan

‎நெஞ்சுவலி‬ ( மாரடைப்பு ) நேரத்தில் உங்கள் உயிரை நொடியில் காப்பாற்றிக் கொள்ள வழிமுறை – See more at: …

nathan