28.8 C
Chennai
Wednesday, Nov 6, 2024
6088
ஆரோக்கிய உணவு

தர்பூசணியை விதையோடு சாப்பிடுபவரா? கட்டாயம் இதை படியுங்கள்

தர்பூசணி பழத்தை நாம் பலரும் விரும்பி சாப்பிடுவோம். ஆனால் நாம் அதிகமாக இந்த பழத்தை சாப்பிட்டு விட்டு இதன் விதையை கீழே துப்பி விடுகிறோம்.

தர்பூசணி பழங்களை சாப்பிடும் முன்பு விதைகளை தனியே அதிலிருந்து எடுத்து வைத்துக்கொண்டு அதை உபயோகிக்கலாம். ஏனென்றால் இதில் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன.

இதன் ஆரோக்கிய நன்மைகளை குறித்து கீழே காண்போம்

உடல் சோர்வு

உடல் சோர்வு பிரச்சனைகளுக்கு தர்பூசணி பழத்தின் விதை நல்ல பயனை தருகிறது. தர்பூசணியில் அதிகமான இரும்புச் சத்துக்கள் , ஹீமோகுளோபின் அதிகமாக இதில் இருக்கிறது. இவை ஆக்சிஜனை தாங்கி செல்ல உதவுகிறது. மேலும் இரும்புச்சத்து உடலில் உள்ள சோர்வை நீக்க பெரிதளவு உதவி செய்கிறது. இரும்புச்சத்து தான் உடலில் இருக்கும் கலோரிகளை சக்தியாக மாற்றக்கூடியது.

இதயம்

ரத்தத்தில் இருக்கும் கெட்ட கொலஸ்ட்ரால் மாரடைப்பு வருவதற்கான காரணமாக அமைந்துள்ளது. ஆனால் தர்பூசணியின் விதை இதயம் பலமாக உறுதியுடனும் செயல்பட உதவுகின்றது. தர்பூசணி பழத்தின் விதையில் மோனோ அன்சாச்சுரேட்டட் மற்றும் பாலி அன்சாச்சுரேட்டட் ஃபேட்டிக் அமிலங்கள் நிறைந்துள்ளன. இது மாரடைப்பு வருவதற்கான காரணங்களை குறைகின்றது.

மூளை

போலிக் ஆசிட் அல்லது விட்டமின் பி9 மூளை செயல்பாட்டுக்கு மிகவும் உறுதுணையாக இருக்கிறது. கர்ப்பிணி பெண்களுக்கு உடலில் அதிகளவு விட்டமின் பி9 இருக்க வேண்டும் . இந்த தர்பூசணி விதையில் அவை அதிகமாகவே இருக்கின்றது. மேலும் இந்த தர்பூசணி பழத்தின் விதைகளில் ஃபோலேட் எனப்படும் அமிலம் நிறைந்து இருக்கிறது. இதில் உள்ள பொட்டாசியம் ஆனது சிந்திக்கும் திறன் ஞாபகசக்தி போன்றவற்றிற்கு பெரிதும் உதவுகிறது.

சர்க்கரை வியாதி

நார்ச்சத்து சர்க்கரை வியாதியை குறைப்பதற்கும் உடல் எடையை குறைப்பதற்கு பெரிதும் உதவுகின்றது. தர்பூசணியின் விதையானது சர்க்கரை வியாதியை கட்டுக்குள் வைக்க பெரிதும் உதவுகிறது. மேலும் சர்க்கரை வியாதி டைப் 2 உள்ளவர்களுக்கு இது மிகப் பெரும் உறுதுணையாக திகழ்கிறது.

உடல் எடை குறைப்பு

இதன் விதைகளில் கலோரியின் அளவு மிகமிகக் குறைவு. ஆகவே உடல் எடையை குறைக்க முயற்சி செய்கிறவர்கள் தர்பூசணி விதையை தாராளமாக உபயோகப்படுத்தலாம்.

Related posts

தெரிந்துகொள்வோமா? ஆரஞ்சு பழத்தின் தோலில் நிறைந்துள்ள ஆச்சரியப்பட வைக்கும் நன்மைகள்!

nathan

வாழைப்பழத்தை தொடர்ந்து சாப்பிடுவதால் உங்கள் எடை அதிகரிக்கும்

nathan

சூப்பர் டிப்ஸ் செவ்வாழையில் இத்தனை நன்மைகளா?

nathan

ஆரோக்கியமா இருக்க இந்த உணவுகளை பச்சையா சாப்பிடுங்க…

nathan

உங்களுக்கு தெரியுமா மலை நெல்லிக்காய் சாப்பிடுவதன் மூலம் கிடைக்கும் நன்மைகள்!!!

nathan

சர்க்கரைக்கு பதிலாக கருப்பட்டி சேர்த்து கொள்வதால் கிடைக்கும் நன்மைகள் சூப்பர் டிப்ஸ்…

nathan

சூப்பர் டிப்ஸ்! இந்த பழத்தை தினமும் சாப்பிடுவதனால் இவ்வளவு நன்மையா?

nathan

இந்த ஒரு டம்ளர் டீ, 10 டம்ளர் க்ரீன் டீக்கு சமம் தெரியுமா?படிங்க…

nathan

உங்களுக்கு தெரியுமா மெகா சைஸ் தொப்பையைக் கூட ஒரே வாரத்தில் கரைக்கும் புளியம்பழ ஜூஸ்…

nathan