தமிழகத்தின் கடலூர் மாவட்டத்தில் ஆற்றில் குளித்த 7 சிறுமிகள் உயிரிழந்த சம்பவம் குறித்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
கடலூர் அருகே நெல்லிக்குப்பம் பகுதியில் உள்ள கெடிலம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட தடுப்பணையில் ஏழு சிறுமிகள் குளித்தனர்.
அப்போது ஆழமான பகுதிக்கு சென்றதால் சிறுமிகள் அனைவரும் நீரில் மூழ்கி இறந்தனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் பிரதமர் மோடி ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சிறுமிகளின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஏழு சிறுமிகள் பலியான துயர சம்பவம்: பிரதமர் மோடி இரங்கல்
இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘தமிழகத்தின் கடலூர் மாவட்டத்தில், ஏழு சிறுமியர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த செய்தியறிந்து வேதனையடைந்தேன். இந்த துயர் மிகுந்த வேளையில், அவர்களின் குடும்பங்கள் மன சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்’ என தெரிவித்துள்ளார்.