28.7 C
Chennai
Tuesday, Oct 22, 2024
21 1440155364 1 watermelon
ஆரோக்கிய உணவு

செரிமான மண்டலத்தை சுத்தம் செய்ய உதவும் பழங்கள்!!!

தற்போது பலரும் செரிமான பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். இதற்கு நாம் உண்ணும் ஆரோக்கியமற்ற ஜங்க் உணவுகள் செரிமான மண்டலத்தில் தங்கி, அதன் சீரான இயக்கத்தைத் தடுப்பதை முக்கிய காரணமாக சொல்லலாம். எனவே வயிற்றில் தங்கியுள்ள கழிவுகள் மற்றும் நச்சுக்களை வெளியேற்ற, பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிட வேண்டும்.

குறிப்பாக ஸ்நாக்ஸ் நேரத்தில் பழங்களை சாப்பிட்டால், மிகவும் எளிமையாக வயிற்றை மட்டுமின்றி, உடலின் அனைத்து உறுப்புக்களையும் சுத்தப்படுத்தலாம். மேலும் உடல்நல நிபுணர்கள், தினமும் ஒரு ஃபுரூட் பௌல் சாப்பிட்டு வந்தால், உடலை சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ளலாம் என்கின்றனர்.

ஆகவே முடிந்தால் தினமும் ஒரு ஃபுரூட் பௌல் சாப்பிடுங்கள். சரி, இப்போது எந்த பழங்களை சாப்பிட்டால் செரிமான மண்டலம் சுத்தமாகும் என்று பார்ப்போமா!

தர்பூசணி தர்பூசணியில் நீர்ச்சத்து அதிகம் உள்ளது. இவை உடலில் மற்றும் செரிமான பாதையில் தங்கியுள்ள டாக்ஸின்களை முற்றிலும் வெளியேற்றும். எனவே ஃபுரூட் பௌலில் தர்பூசணியை சேர்த்துக் கொள்ளுங்கள் அல்லது வாரம் இரண்டு முறையாவது தவறாமல் இதனை உட்கொண்டு வாருங்கள்.

ஆப்பிள் சத்துக்கள் அதிகம் நிறைந்த ஆப்பிள் கூட செரிமான பாதைகளை சுத்தம் செய்ய உதவும். ஆப்பிளில் நார்ச்சத்து மற்றும் பெக்டின் போன்ற டாக்ஸின்களின் சேர்க்கையை தடுக்கும் மற்றும் குடலை சுத்தம் செய்யும் பொருட்கள் அதிகம் உள்ளது.

அவகேடோ/ வெண்ணெய் பழம் வெண்ணெய் பழமானது சக்தி வாய்ந்த ஊட்டச்சத்துக்களைக் கொண்டது. அதில் ஒன்று தான் குளுடாதயோன். இந்த சத்து கல்லீரலில் உள்ள தீங்கு விளைவிக்கும் நச்சுக்கள் மற்றும் கெமிக்கல்களை வெளியேற்றி, செரிமானத்தை சீராக்கி, செரிமான பிரச்சனை ஏற்படாமல் தடுக்கும்.

ப்ளூபெர்ரி ப்ளூபெர்ரி கூட செரிமான மண்டலத்தை சுத்தமாக்கும் ஓர் அற்புத பழம். வாரம் ஒருமுறை இந்த பழத்தை ஒரு கையளவு சாப்பிட்டு வந்தால், உடலின் செரிமான பாதையில் உள்ள தீங்கு விளைவிக்கும் அனைத்து கெமிக்கல்களையும் வெளியேற்றிவிடலாம்.

கிரான்பெர்ரி/குருதிநெல்லி கிரான்பெர்ரி கிடைத்தால், அவற்றை தவறாமல் சாப்பிடுங்கள். ஏனென்றால், கிரான்பெர்ரி உடலில் உள்ள கெட்ட பாக்டீரியாக்களை அழித்து வெளியேற்றிவிடும். அதிலும் வாரத்திற்கு 2 முறை ஒரு கையளவு கிரான்பெர்ரி சாப்பிட்டால், உடலின் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

பப்பளிமாஸ்/கிரேப் புரூட் பப்பளிமாஸ் பழத்தில் பெக்டின் அதிகம் உள்ளது. இவை வயிற்றை சுத்தம் செய்வதோடு, உடலை ப்ரீ-ராடிக்கல்களிடமிருந்து பாதுகாக்கும். இந்த பழத்தை அப்படியே அல்லது ஜூஸ் போட்டு கூட எடுத்து வரலாம்.

21 1440155364 1 watermelon

Related posts

சுவையான வேர்க்கடலை பக்கோடா

nathan

சுவையான வாழைப்பழ முட்டை தோசை

nathan

வெற்றிலையில் உள்ள ஆச்சரியமான விஷயம்

nathan

ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்கும் உருளைக்கிழங்கு

nathan

பச்சை பயறு உடல் எடையை சீராக பராமரிக்கவும் சருமம் மற்றும் கூந்தல் பிரச்சினைகளையும் சரி செய்கிறது

nathan

வெண்டைக்காய் ஊற வைத்த நீரைப் பருகுவதால் பெறும் நன்மைகள் குறித்து தெரியுமா?

nathan

சூப்பர் டிப்ஸ்.. சமையலில் சில செய்யக்கூடாத தவறுகள் என்ன தெரியுமா…?

nathan

தமிழர்கள் சுப நிகழ்ச்சிகளில் தேங்காய் ஏன் உடைக்கிறார்கள்?

nathan

உங்களுக்கு எலுமிச்சம் பழத்தின் முழுமையான மருத்துவப் பயன்கள் தெரியுமா? அப்ப இத படிங்க!

nathan