இஞ்சி செரிமாணத்தை தூண்டும். இஞ்சி சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
செரிமாணத்தை ஏற்படுத்தும் இஞ்சி சாதம்
தேவையான பொருட்கள் :
இஞ்சி – இரண்டு துண்டு,
வெங்காயம் – 1
காய்ந்த மிளகாய் – 2
கறிவேப்பிலை – சிறிதளவு
எண்ணெய் – இரண்டு டீஸ்பூன்,
கடுகு, பெருங்காயம் – தேவையான அளவு,
உப்பு – தேவையான அளவு,
வடித்த சாதம் – இரண்டு கப்
செய்முறை :
* இஞ்சியை தோல் சீவி, துருவியோ (அ) விழுதாய் அரைத்தும் பயன்படுத்தலாம்.
* வெங்காயத்தை பொடியாக நறுக்கிகொள்ளவும்.
* வாணலியில் கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் போட்டு தாளித்த பின் அரைத்து இஞ்சி விழுதை போட்டு வதக்கவும்.
* நன்றாக வதக்கியதும் இரண்டு கப் வடித்த சாதத்தை போட்டு கிளறி இறங்கி பரிமாறலாம்.
* இதனை பிரிஞ்சி சாதம் போல் பாசுமதி அரிசியில் குக்கரிலும் செய்து உண்ணலாம்.