இன்றைய உலகில் ஒருவரின் குணங்களை கணிப்பது தான் பெரும்பாடாக உள்ளது. என்ன தான் ஒருவர் நம்மிடம் நன்றாக பேசினாலும் உண்மையிலே அவர் நன்றாக பேசினாரா? என்னும் சந்தேகம் சிலருக்கு எழுவதுண்டு. சிலர் அலுவலகத்தில் ஒரு மாதிரி வீட்டில் ஒரு மாதிரி இருப்பார்கள். இன்னும் சிலர் எல்லா இடங்களிலும் ஒரே மாதிரி தான் நடந்து கொள்வார்கள். அவர்களை எப்போது பார்த்தாலும், பேசினாலும் நமக்கு ஒரே மாதிரி தான் தெரிவார்கள்.
ஒருவரை பற்றிய நம்முடைய அபிப்ராயங்கள் எப்போது வேண்டுமானாலும் மாறி போகலாம் என்ற நிலைதான் தற்போதைய காலகட்டத்தில் உள்ளது. இந்த நிலையில் ஒருவரின் ரத்த வகையை வைத்தே அவரின் குணத்தை உங்களால் கண்டறிய முடிந்தால் எப்படி இருக்கும்? இதுகுறித்து ஜப்பானைச் சேர்ந்த மருத்துவர் மற்றும் பேராசிரியர் டோகேஜி ஃபுருகவா என்பவர் ஆய்வு செய்து வெளியிட்டிருக்கிறார்.
அந்த வகையில் உங்களின் ரத்த குணத்தை வைத்து நீங்கள் எப்படிப்பட்டவர் என்பதை கீழே பார்க்கலாம்:-
இவர்கள் இலகுவான குணம் கொண்டவர்கள். அதிகம் உணர்ச்சிவசப்படக் கூடியவர்கள். பொறுமையானவர்கள். அன்பானவர்கள். தான் எந்த ஒரு விஷயம் செய்தாலும் நன்கு யோசித்து தீர்க்கமான முடிவாக எடுப்பார்கள். சுத்தம், சுகாதாரம் ஒழுக்கம் இவைதான் இவர்களின் மூச்சு. இவர்களை எளிதில் காயப்படுத்திவிட முடியும். யாரிடமும் அதிகம் பேச மாட்டார்கள். தனிமை இவர்களுக்கு மிகவும் பிடிக்கும்.
B வகை ரத்தம் கொண்டவர்கள்
கற்பனைத் திறன் அதிகம் கொண்டவர்கள். எதையும் சட்டென முடிவெடுத்து செய்வார்கள். அந்த முடிவில் உறுதியாகவும் இருப்பார்கள். எதற்கும் துணியும் சாகசங்களை விரும்பும் நபர். சுறுசுறுப்பாக இருப்பார்கள். வாழ்க்கையில் மற்றவர்களால் நிறைய வேதனைகளை அனுபவித்திருப்பார்கள். சுயநலம் , பொறுப்பின்மை, ஒத்துழைக்காத குணங்களால் மற்றவர்களிடம் வெறுப்பை சம்பாதிப்பார்கள்.
AB வகை ரத்தம் கொண்டவர்கள்
இவர்கள் A மற்றும் B வகை குணங்களைக் கலந்த குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் எப்போது எப்படி இருப்பார்கள் என்பதை கண்டறிவதே சிக்கல். இவர்களை எளிதில் புரிந்துகொள்ளவே முடியாது. அவர்களுடன் நீண்ட காலம் வாழ்ந்து முழுமையாக பழகினாலே அவர்களின் குணத்தை புரிந்துகொள்ள முடியும். வெளி நபர்களுக்கு அவர்களை புரிந்துகொள்வது கடினம். அதேபோல் இந்த வகை ரத்தம் கொண்டவர்கள் உலக அளவில் மிகக் குறைவு. எளிதில் நட்பு வட்டத்தை உருவாக்குவார்கள். எப்போதும் கூலாக , அக்கறையாக இருப்பார்கள். அவர்கள் எப்போதும் கவலைகளால் சோர்ந்து இருக்க மாட்டார்கள். அதேசமயம் பொருப்பில்லாமல் இருப்பார்கள், மறதி , மன்னிக்காத குணம் அதிகம் இருக்கும்.
O வகை ரத்தம் கொண்டவர்கள்
இவர்கள் அதிக நம்பிக்கை குணம் கொண்டவர்கள். தலைமைப் பண்பு, ஆளுமை திறன், நேர்மை அதிகம் இருக்கும். இதனால் மற்றவர்களுக்கு சுயநலம் கொண்டவர்களாகத் தெரிவார்கள். குறிப்பாக A வகை ரத்தம் கொண்டவர்களுக்குத் சுயநலமாகத் தெரிவார்கள். அதிக அன்பு, இலகிய மனம் கொண்டவர்கள். எதையும் சட்டென புரிந்து கொண்டு அதை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் கொண்டவர்கள். எதையும் பெரிதாக குழப்பிக்கொள்ளாமல் சாதாரணமாகக் கடந்து செல்வார்கள். எப்போதும் பாசிடிவான தோற்றம் கொண்டவர்கள். சுதந்திரமானவர்கள், தன்னிச்சையாக முடிவெடுக்கும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். அதேசமயம் இவர்களுக்கு பொறாமை குணமும் கொஞ்சம் அதிகம்.