வீட்டிலேயே சோப்பு தயாரிப்பது எப்படி என்பது குறித்து பார்க்கலாம்.
அதில் நாம் தேர்வு செய்திருப்பது தேங்காய் எண்ணெய் சோப்பு. தேங்காய் எண்ணை உடலுக்கு ஆரோக்கியத்தையும் அழகையும் தரும் அதனால் இதை பயன்படுத்து சோப்பு தயாரிக்கலாம்.
தேவையான பொருட்கள்
தேங்காய் எண்ணெய் 1லிற்றர் (செக்கு எண்ணை சிறந்தது)
காஸ்டிக் சோடா – 135கிராம் (சோப்பு கட்டியாக்கும் தன்மை கொண்டது)
தண்ணீர் -370மில்லி லிற்றர் ( சுத்தமான குடிநீர்)
வாசனை திரவியம் -15 மில்லி லிற்றர் (மணம் சேர்க்கும் திரவியம்)
தயாரிப்புமுறை
பாதுகாப்பு அணிகலன்கள் அணிந்து கொண்டு தண்ணீர் 370மில்லி எடுத்து ஒரு கடினமான பாத்திரத்தில் ஊற்றி அதனுடன் சோடியம் ஹைட்ராக்சைடு 135கிராம் கொஞ்சம் கொஞ்சமாக சேர்க்கவும். அதனை மெல்ல மரக்குச்சியால் நன்றாக கலக்கி விடவும். சிறிது நேரத்தில் வேதியல் வினை புரிந்து சூடாகும். அந்த நேரத்தில் வெளியாகும் வாயுவை சுவாசிக்க கூடாது.
அதன்பின் நிறம் வெண்மையாக மாறி இருக்கும். அப்படியே சிறிது நேரம் விட்டு விடவும். 10 அல்லது 15 நிமிடம் சென்ற பிறகு மீண்டும் தண்ணீரின் நிறத்தில் மாறிவிடும்.
அதன்பின் தேங்காய் எண்ணெய்யை சில்வர் பாத்திரம் அல்லது மின்சார குக்கரில் ஊற்றி சூடு செய்து அதனுடன் முன்னர் தயார் செய்து வைத்த சோடியம் ஹைட்ராக்சைடு கரைசலை சேர்ந்து கலக்கி கொண்டே இருக்கவும்.
தொடர்ந்து கலக்கும் போது எண்ணெயின் தன்மை மாறும். அது பசைபோல் மாறுவரை தொடர்ந்து கலக்கவும்.
பின் பசை தன்மை அடைந்ததும் பாத்திரத்தை மூடி நன்றாக வேக விடவும். முன்பை விட மேலும் இறுகி இருக்கும். இதற்கு பாத்திரத்தின் தன்மை, வெப்பநிலை பொறுத்து நேரம் மாறுபடும். 45நிமிடம் முதல் 1.30மணி நேரம் ஆகலாம்.
அனைத்தும் ஒன்றுடன் ஒன்று கலந்திருக்க வேண்டும். எண்ணெய் துளிகள் தனித்து தெரியாமல் இருக்கும் அளவில் கலந்திருக்க வேண்டும். பின் PH பேப்பரில் 7-10 இருக்கும் அளவில் நிறம் மாறுகிறதா என்று சோதனை செய்ய வேண்டும். PHஅளவு 10க்கு மேல் இருந்தாலோ அல்லது பிசு பிசு என இந்தாலோ மீண்டும் வேக வைக்க வேண்டும். முழுவதும் சோப்பு பசையாக மாறிவிட்டதா என்று பார்ப்பது மிகவும் அவசியம்.
அந்த கலவையில், வாசனை திரவியம் தேவையான அளவில் சொட்டு சொட்டாக சேர்த்து நன்றாக கலக்கவும்.
அதன்பின் விரும்பிய வடிவத்தில் அச்சு தயாரித்து அனுள் பட்டர் பேப்பர் போட்டு கலவையை கொட்டி சமமாக பரப்பி விடவும்.
ஒருநாள் முழுவதும் அப்படியே இறுகவிட்டு அடுத்த நாள் எடுத்து தேவையாக அளவு துண்டுகளாள வெட்டி மீண்டும் இரண்டு நாட்கள் உலர்த்தி பத்திரப்படுத்தி கொள்ளலாம்.
இதேபோல் உங்களுக்கு விருப்பமான எண்ணெய் பயன்படுத்தி சோப்பு தயாரிக்கலாம்.