நாம் நமது சருமத்தை பருவ நிலைக்கு ஏற்றவாறும் பாதுகாப்பது மிகவும் அவசியம். கோடை காலங்களில் முகத்தை அடிக்கடி தண்ணீரை வைத்து கழுவுவது மிகவும் நல்லது. நமது சருமத்தை நாம் பாதுகாக்க ஜூஸ் மற்றும் தண்ணீர் அதிகஅளவில் குடித்து வருவது மிகவும் நல்லது.
கேரட் ஜூஸ் :
கேரட்டில் வைட்டமின் ஏ இருப்பதால் அது நமது சருமத்திற்கு நல்ல பொலிவை தருவதோடு சருமத்தில் ஏற்படும் சுருக்கங்களையும் தடுக்கிறது. இதனை நாம் தினமும் குடித்து வருவதால் சருமத்திற்கு மிகவும் நல்லது.
பீட்ருட் ஜூஸ் :
பீட்ருட்டில் வைட்டமின் சி ,பொட்டாசியம், போலிக் அமிலம், மெக்னீசியம், முதலிய சத்துக்கள் காணப்படுவதால் இந்த ஜூஸை நாம் அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வது மிகவும் நல்லது.இது நமது உடலில் உள்ள இரத்தத்தை சுத்தபடுத்தி நமது சருமத்திற்கு பொலிவையும் கொடுக்கிறது.
தக்காளி ஜூஸ் :
தக்காளி ஜூஸை நாம் தினமும் குடித்து வருவதால் நமது சருமத்தில் உள்ள சுருக்கங்களையும், சருமத்தை எப்போதும் முதிர்ச்சி அடையாமல் வைக்க மிகவும் உதவுகிறது.இது சருமத்தில் உள்ள துளைகளை குறைக்கவும் உதவும்.
தக்காளியை வெட்டி அதில் சர்க்கரையை தொட்டு முகத்தை ஸ்கரப் செய்து வர முகம் எப்போதும் பளபளப்பாக இருக்கும்.
வெள்ளரிக்காய் ஜூஸ் :
சருமத்தில் எப்போதும் உலர விடாமல் பாதுகாக்க வெள்ளரிக்காய் ஜூஸை குடிப்பது மிகவும் நல்லது.இதில் இருக்கும் அஸ்கார்பிக் அமிலம் முகத்தை எப்போதும் உலராமல் வைத்திருக்க உதவுகிறது.