சளி, இருமல் தொல்லையால் அவதிப்படுபவர்கள் கண்டந்திப்பிலி ரசம் செய்து குடித்தால் நிவாரணம் கிடைக்கும். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
கண்டந்திப்பிலி – 3 துண்டு,
மிளகு – 1/2 டீஸ்பூன்,
தனியா – 1/4 டீஸ்பூன்,
துவரம் பருப்பு – 1/4 டீஸ்பூன்,
புளி – எலுமிச்சை அளவு,
கொத்தமல்லி – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு.
தாளிக்க…
காய்ந்த மிளகாய் – 3,
கடுகு – அரை டீஸ்பூன்,
கறிவேப்பிலை – சிறிதளவு,
எண்ணெய் – தேவையான அளவு.
செய்முறை :
கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் கண்டந்திப்பிலி, மிளகு, தனியா, துவரம் பருப்பை தனித்தனியாக போட்டு வறுத்து ஆற வைக்கவும்.
நன்றாக ஆறியதும் மிக்சியில் போட்டு நைசாக அரைக்கவும்.
கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
புளியை கரைத்து கொள்ளவும்.
புளிக்கரைசலில் 1 அல்லது 2 டீஸ்பூன் அரைத்த பொடியை போட்டு கரைத்து உப்பு சேர்த்து அடுப்பில் வைத்து ஒரு கொதி வரும்வரை வைக்கவும். கொதி வந்தவுடன் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை போட்டு தாளித்து ரசத்தில் கொட்டி பரிமாறவும்.
சூப்பரான கண்டந்திப்பிலி ரசம் ரெடி.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி