மஞ்சளில் புரதம், நார்ச்சத்து, வைட்டமின் E, நியாசின், வைட்டமின் C, பொட்டாசியம், தாமிரம் (காப்பர்), இரும்பு, கால்சியம், மக்னீசியம், துத்தநாகம் (ஜிங்க்) போன்ற ஊட்டச்சத்துகளும் தாதுக்களும் நிறைந்துள்ளன.
மஞ்சள் தூளை, சந்தனப் பொடியுடன் சேர்த்து பேஸ்ட் போல் கலந்து முகத்தில் தடவி காயவைத்து கழுவினால் முகத்தில் இருக்கும் முகப்பரு போய்விடும்.
பாலில் சிறிது மஞ்சள் தூளை கலந்து அதனைக் கொண்டு முகத்தை துடைத்தால் சருமத்தில் உள்ள அழுக்குகள் அனைத்தும் வெளியேறி சருமம் பொலிவோடு காணப்படும். அதுமட்டுமின்றி இதனை வெடிப்புள்ள உதட்டில் தடவி வந்தால் வெடிப்புகள் நீங்கிவிடும்.
எலுமிச்சை சாற்றில் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து சருமத்தில் தடவி வந்தால் வெயிலால் மாறியிருந்த சருமத்தின் நிறம் மீண்டும் பழைய நிறத்திற்கு திரும்புவதோடு சருமமும் பொலிவோடு மென்மையாக இருக்கும்.
சருமத்தில் உள்ள காயங்களை போக்கி, அழகான சருமத்தை பெருவதற்கு, மஞ்சள் தூளுடன் தேன் கலந்து தடவி ஊறவைத்து கழுவவேண்டும்.
தயிருடன் மஞ்சள் தூளை சேர்த்து, முகத்திற்கு தடவி மசாஜ் செய்து வந்தால், சருமம் குளிர்ச்சியுடன் இருப்பதோடு பொலிவோடும் இருக்கும்.
தினமும் மஞ்சளை நீரில் கலந்து, முகத்திற்கு நன்கு பூசி சிறிது கழித்து முகம் கழுவி வந்தால் முகத்தில் முளைக்கின்ற தேவை முடிகள் உதிரும். எதிர்காலத்தில் முகத்தில் தேவையற்ற முடிகள் முளைக்காமல் தடுக்கவும் செய்கிறது.
ரத்தத்தைச் சுத்தப்படுத்தும் குணமும் மஞ்சளுக்கு உண்டு. உடலுக்கு நிறத்தைக் கூட்டும் தன்மை கொண்டது.