அழகு குறிப்புகள்

உங்களுக்கு தெரியுமா ரோஜா பூவின் 7 அழகு நன்மைகள்!

ரோஜா காதலை அதிகரிக்க உதவும் என்பது உலகறிந்த விஷயம். ஆனால், அழகை அதிகரிக்கவும் உதவும் என நீங்கள் அறிவீர்களா? ஆம்! ரோஜாவில் உள்ள இயற்கை நற்குணங்கள் உங்கள் சருமம் பொலிவடையவும், சரும பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கவும் வல்லது. உங்கள் சருமம் ரோஜா காம்பின் முட்கள் போல இருந்தாலும், அதை ரோஜா மலரின் இதழ்களைப் போல மென்மையடைய செய்ய ரோஜாவினால் முடியும் என்பது அதன் மருத்துவ குணங்களால் நிரூபிக்கப்பட்டவை ஆகும்.

காதலுக்கு பெயர் போன ரோமர்கள் அந்த காலத்திலேயே ரோஜாவை அழகு சேர்க்கவும், மருத்துவத்தில் பயன்படுத்தி இருகின்றனர். சரும எரிச்சல், சருமம் வறட்சி போன்ற சரும கோளாறுகளுக்கு ரோஜா நல்ல பயன் தருகிறது. ரோஜா மட்டும் இன்றி ரோஜாவினில் இருந்து எடுக்கப்படும் பன்னீரிலும் அதிக அளவில் மருத்துவ குணங்கள் இருக்கின்றன. குறிப்பாக பன்னீர் கொண்டு முகம் கழுவி வந்தால் முகத்தில் பருக்களும், வடுக்களும் குறையும் என்பது குறிப்பிடத்தக்கது. சரி இனி, ரோஜாவில் இயற்கையாகவே உள்ள அழகிற்கான நன்மைகளைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்…

ஆன்டி-பாக்டீரியல்

ரோஜாவில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் சருமத்தில் ஏற்படும் முகப் பருக்களை குறைக்க உதவுகிறது. பன்னீர் கொண்டு நீங்கள் முகம் கழுவி வந்தால் முகப்பரு பிரச்சனைக்கு ஓர் சிறந்த தீர்வினை காணலாம்.

எரிச்சலை தணிக்கும்

ரோஜாவில் இருக்கும் இயற்கை நற்குணங்கள் வடுக்களின் மூலம் சருமத்தில் ஏற்படும் எரிச்சலை குறைக்க வல்லது. மற்றும் இது படையினால் ஏற்படும் பிரச்சனைகளை குறைக்கவும் வெகுவாக உதவுகிறது.

ஆன்டி-ஆக்ஸிடன்ட்

ரோஜாவில் நிறைந்திருக்கும் வைட்டமின் சி, ஒரு நல்ல ஆன்டி-ஆக்ஸிடன்ட் ஆகும். வைட்டமின் சி’யின் முக்கியத்துவம் என்னவெனில், இது சருமத்தில் இருக்கும் செல்களை சேதமடையாமல் பாதுகாக்கிறது. மற்றும் ரோஜா வேனிற்கட்டி (Sunburn) எரிச்சல்களில் இருந்து பாதுகாக்கவும் உதவுகிறது.

ஈரப்பதம்

சருமத்தில் ஈரப்பதத்தை தக்க வைக்க ரோஜா நன்கு பயன்படுகிறது. மற்றும் உங்கள் சருமத்தை மிருதுவாக வைத்துக் கொள்ளவும் ரோஜா இதழ்கள் உதவுயளிக்கிறது.

இயற்க்கை மனம்

ரோஜாவில் இயற்கையிலேயே நல்ல நற்மணம் இருப்பதால், இதை அதிகமான அழகு சாதனப் பொருட்களில் பயன்படுத்தப்படுகிறது. குளிக்கும் போது நீரில் ரோஜா இதழ்களை ஊறவைத்து குளித்தால் நாள் முழுதும் உங்கள் உடலில் நற்மணம் வீசும்.

இலக வைக்கும் தன்மை

ரோஜாவின் வாசனை உங்கள் மனதை அமைதியாக்கவும், ஒருநிலைப்படுத்தவும் உதவுகிறது. இதை பற்றி ஆயுர்வேத மருத்துவத்திலேயே குறிப்பிட்டு சொல்லப்பட்டுள்ளது

சருமத்தின் நிறம்

இயற்கையிலேயே ரோஜாவிற்கு சருமத்தின் நிறத்தை கட்டுப்படுத்தும் தன்மை உள்ளது. இதனால், ரோஜா உங்களது சருமத்தை பொலிவடைய செய்யவும், பிரகாசிக்க வைக்கவும் உதவுகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button