மிளகு சித்த மருத்துவ முறைகளில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இதனால் உடல் மிகுந்த ஆரோக்கியம் அடையும். உடல் சோம்பலை நீக்கும் தன்மை கொண்டது.
மிளகுடன் வெல்லம் சேர்த்து காலையும் மாலையும் சாப்பிட்டு வந்தால் தலைவலி, தலைபாரம் குணமாகும். 10 மிளகை தூளாக்கி ½ லிட்டர் நீரிலிட்டு காய்ச்சி கசாயமாக செய்து குடித்தால் கோழை மற்றும் இருமல் தீரும்.
மிளகுடன் உப்பு சேர்த்து பல் துலக்கினால் பல்வலி, சொத்தை பல், ஈறுவலி, ஈறுகளிலிருந்து இரத்தம் வடிதல் குணமாகும், பற்களும் வெண்மையாக இருக்கும், வாயில் துர்நாற்றத்தை போக்கும்.
மிளகு, சுக்கு, திப்பிலி சேர்த்து சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
மிளகு இரத்தத்தை சுத்திகரிக்கும் தன்மை கொண்டது. மிளகு பொடியை தேனுடன் கலந்து இருவேளை எடுத்துவர ஞாபகமறதி, உடல் சோம்பல், சளி தொந்தரவுகள் நீங்கும்.
மூக்கடைப்பு ஏற்பட்டிருக்கும்போது மிளகை தீயில் சுட்டு அதன் புகையை சுவாசித்தால் அடுத்த நொடியே அடைப்பு விலகுவதோடு தடையின்றி சுவாசிக்க முடியும். மிளகு வயிற்றிலுள்ள வாயுவை அகற்றி உடலுக்கு வெப்பத்தைத் தருவதோடு வீக்கத்தைக் கரைக்கும் தன்மையையும் கொண்டது.
இது காரமும் மணமும் உடையது. உணவைச் செரிக்க வைப்பதிலும், உணவில் உள்ள நச்சுத் தன்மையைப் போக்குவதிலும் வல்லது.
தொண்டை வலி இருந்தால் கொஞ்சம் மிளகு, ஓமம், உப்பு ஆகிய மூன்றையும் சேர்த்து வாயில் போட்டு மென்றால் தொண்டை வலி படிப்படியாக குணமாகும்.