பொட்டுக்கடலை உருண்டையை எப்படி செய்வது என்று இன்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
பொட்டுக்கடலை – 1 கப்
பொடித்த வெல்லம் – ¾ கப்
ஏலப்பொடி, சுக்குப் பொடி- 1 ஸ்பூன்
செய்முறை
முதலில் பொட்டுக்கடலையை (உடைத்த கடலை) ஒரு பாத்திரத்தில் போடவும்.
வேறு பாத்திரத்தில் வெல்லத்தைப் போட்டு சிறிது நீர் விட்டு கரைத்து வடிகட்டி பாகு காய்ச்சவும். பாகில் ஏலம், சுக்குப் பொடி சேர்த்து நன்கு உருட்டுப் பதம் வரும் வரை காய்ச்சவும்.
பாகு காய்ந்ததும் பொட்டுக் கடலையில் ஊற்றி கரண்டியால் கலந்து விடவும்.
கையில் அரிசி மாவு அல்லது நெய் தொட்டுக் கொண்டு உருட்டவும். இப்போது சத்தான சுவையான பொட்டுக்கடலை உருண்டை ரெடி.