சாதத்திற்கு இந்த தயிர் உருண்டை குழப்பு சூப்பரான சைடிஷ். இன்று இந்த தயிர் உருண்டை குழம்பை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
சூப்பரான சைடிஷ் தயிர் உருண்டை குழம்பு
தேவையான பொருட்கள் :
கடைந்த தயிர் – 250 மி.லி.
உருண்டை செய்ய…
கடலைப்பருப்பு – 100 கிராம்,
துவரம்பருப்பு – 50 கிராம்,
காய்ந்தமிளகாய் – 10,
தனியா – 2 டீஸ்பூன்,
உப்பு, பெருங்காயத்தூள், மஞ்சள் தூள் – தேவைக்கு,
எண்ணெய் – 4 டீஸ்பூன்.
அரைக்க…
தனியா – 2 டீஸ்பூன்,
பச்சைமிளகாய் – 6,
இஞ்சி – 1 துண்டு,
தேங்காய்த்துருவல் – 1/2 கப்,
சீரகம் – 1 டீஸ்பூன்,
மிளகு – 1/2 டீஸ்பூன்,
அரிசி – 1 டீஸ்பூன்.
தாளிக்க…
எண்ணெய் – 2 டீஸ்பூன்,
கடுகு – 1 டீஸ்பூன்,
சீரகம் – 1 டீஸ்பூன்,
கறிவேப்பிலை – 1 கொத்து.
செய்முறை :
கடலைப்பருப்பு, துவரம் பருப்பை 2 மணிநேரம் ஊறவைத்து கொள்ளவும்.
கடலைப்பருப்பு, துவரம் பருப்பு நன்றாக ஊறியவுடன் தனியா, உப்பு, காய்ந்தமிளகாய் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
அரைத்த மாவில் 1 டீஸ்பூன் எண்ணெய், மஞ்சள் தூள், சிறிது உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக பிடித்து இட்லி தட்டில் வேகவைத்து கொள்ளவும்.
அரைக்க கொடுத்தவற்றை ஊறவைத்து மிக்சியில் போட்டு அரைத்து, 2 டம்ளர் தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து அடிபிடிக்காமல் கொதிக்க விடவும்.
நன்றாக கொதித்து வரும் போது அதில் வேக வைத்த உருண்டை, கடைந்த தயிரை ஊற்றி நுரைத்து வரும் பொழுது இறக்கவும்.
மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் தாளிக்க கொடுத்த பொருட்களை தாளித்து தயிர் கலவையில் கொட்டி பரிமாறவும்.
சூப்பரான தயிர் உருண்டை குழம்பு ரெடி.