24.3 C
Chennai
Thursday, Dec 19, 2024
hqdefault
சட்னி வகைகள்

சூப்பரான செட்டிநாடு மிளகாய் சட்னி

செட்டிநாடு ஸ்டைல் உணவுகள் அனைத்துமே சுவையுடன் இருப்பதோடு காரமாகவும் இருக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். இப்போது அந்த செட்டிநாடு ஸ்டைலில் ஒன்றான மிளகாய் சட்னி/கார சட்னியைப் பற்றி தான் பார்க்க போகிறோம். இந்த சட்னியானது தோசை, இட்லி போன்றவற்றிற்கு அருமையாக இருக்கும்.

இப்போது அந்த சட்னியின் செய்முறையைப் பார்ப்போமா!!!

Chettinad Chilli Chutney

தேவையான பொருட்கள்:

வெங்காயம் – 2

வரமிளகாய் – 4-5

பூண்டு – 3

புளி – 1 இன்ச்

பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை

எண்ணெய் – 2 டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

தாளிப்பதற்கு…

கடுகு – 1/2 டீஸ்பூன்

உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்

கறிவேப்பிலை – சிறிது

நல்லெண்ணெய் – 2 டீஸ்பூன்

செய்முறை:

முதலில் வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தைப் போட்டு 2-3 நிமிடம் வதக்க வேண்டும்.

பின்பு அதில் பூண்டு, புளி, வரமிளகாய், பெருங்காயத் தூள் சேர்த்து சிறிது நேரம் வதக்கி, உப்பு தூவி மீண்டும் 2 நிமிடம் கிளறி இறக்கி குளிர வைக்க வேண்டும்.

பிறகு அதனை மிக்ஸியில் போட்டு, சிறிது தண்ணீர் ஊற்றி, நன்கு மென்மையாக அரைத்து, ஒரு பௌலில் போட்டுக் கொள்ள வேண்டும்.

பின் ஒரு சிறு வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி, அதில் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து சட்னியில் ஊற்றினால், செட்டிநாடு மிளகாய் சட்னி ரெடி!!!

Related posts

தக்காளி பூண்டு சட்னி

nathan

வெங்காய காரச்சட்னி

nathan

ஆரஞ்சு தோல் பச்சடி

nathan

சுவையான கடலைப்பருப்பு சட்னி

nathan

பச்சை மிளகாய் பச்சடி

nathan

முட்டைக்கோஸ் சட்னி

nathan

வெங்காய கார சட்னி

nathan

கத்தரிக்காய் சட்னி

nathan

தக்காளி – பூண்டு சட்னி

nathan