27.5 C
Chennai
Wednesday, Nov 6, 2024
carrot sambar
ஆரோக்கிய உணவு

சூப்பரான கேரட் சாம்பார்

கண்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் மிகவும் சிறப்பான உணவுப் பொருள் தான் கேரட். இந்த கேரட்டை அன்றாடம் உணவில் சேர்த்து வந்தால், அதில் உள்ள வைட்டமின் ஏ சத்தினால் பார்வை கோளாறு ஏற்படுவதைத் தடுக்கலாம். அதற்கு அதனை பச்சையாகவோ அல்லது ஜூஸ் செய்தோ அல்லது சாம்பார் செய்தோ சாப்பிடலாம்.

இங்கு கேரட் சாம்பார் எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து, உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள்.

Carrot Sambar Recipe
தேவையான பொருட்கள்:

துவரம் பருப்பு – 1/2 கப் (வேக வைத்தது)
கேரட் – 3 (நறுக்கியது)
வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
தக்காளி – 1 (நறுக்கியது)
கறிவேப்பிலை – சிறிது
கொத்தமல்லி – சிறிது
புளிச் சாறு – 1/4 கப்
சாம்பார் பொடி – 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
தண்ணீர் – 1 கப்
எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்
கடுகு – 1/2 டீஸ்பூன்
வெந்தயம் – 1/4 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை

செய்முறை:

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, வெந்தயம், பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்து, பின் கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து 1 நிமிடம் நன்கு பொன்னிறமாக வதக்க வேண்டும்.

பின்பு அதில் கேரட் மற்றும் தக்காளி சேர்த்து 2 நிமிடம் நன்கு வதக்கி விட வேண்டும்.

பிறகு தீயை குறைத்து, அதில் மஞ்சள் தூள் மற்றும் சாம்பார் பொடி சேர்த்து சிறிது நேரம் பிரட்டி, பின் தீயை அதிகரித்து, புளிச்சாறு, உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து மூடி வைத்து பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விட வேண்டும்.

இறுதியில் அதில் துவரம் பருப்பை சேர்த்து, சாம்பார் சற்று கெட்டியான பின், அதில கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், கேரட் சாம்பார் ரெடி!!!

Related posts

மாம்பழத் தோலில் இவ்வளவு நன்மைகள் இருக்கா? தெரிந்துகொள்வோமா?

nathan

தினசரி உணவுகளில் சேர்க்கப்படும் இந்த இரசாயனங்களால் உயிருக்கே ஆபத்தாம்…

nathan

உடலின் மிகப்பெரிய சுரப்பியான கணையத்தின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் உணவுகள்!!!

nathan

இந்த பிரச்சனை இருக்குறவங்க முந்திரியை அறவே தொட கூட வேண்டாம்!

nathan

பிரச்சினை வரும் உஷார்! மதிய உணவு சாப்பிட்ட பிறகு இந்த 5 விடயங்களை கட்டாயம் செய்யாதீங்க!

nathan

உங்களுக்கு தெரியுமா உணவில் உப்பை அளவாக சேர்த்துக் கொள்வதால் பெறும் நன்மைகள்

nathan

கருத்தரிப்பதில் பிரச்சனைக் கொண்டவரா?உங்களுக்குதான் இந்த விஷயம்

nathan

தெரிஞ்சா ஷா க் ஆயிடுவீங்க! கொழுப்பு குறைவான தயிரை Fridge இல் வைத்தால் என்ன நடக்கும் தெரியுமா?

nathan

வாய்ப்புண், வயிற்றுபுண்ணை குணமாகும் கசகசா கஞ்சி

nathan