13 capsicum masala
ஆரோக்கிய உணவு

சூப்பரான குடைமிளகாய் மசாலா சாதம்

வைட்டமின் சி அதிகம் நிறைந்த குடைமிளகாய் பலருக்கு மிகவும் பிடித்த காய்கறிகளுள் ஒன்றாக இருக்கும். இத்தகைய குடைமிளகாயைக் கொண்டு பல ரெசிபிக்களை சமைக்கலாம். அவற்றில் ஒன்று தான் குடைமிளகாய் மசாலா சாதம். இந்த குடைமிளகாய் சாதமானது காலை வேளையில் செய்வதற்கு ஏற்றது. பேச்சுலர்கள் கூட இதனை சமைக்கலாம்.

இப்போது அந்த குடைமிளகாய் மசாலா சாதத்தை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

Capsicum Masala Rice
தேவையான பொருட்கள்:

குடைமிளகாய் – 1 (பொடியாக நறுக்கியது)
கடுகு – 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 2 டீஸ்பூன்
மல்லி – 2 டீஸ்பூன்
வரமிளகாய் – 4
சீரகம் – 2 டீஸ்பூன்
வேர்க்கடலை – 1 கையளவு
கறிவேப்பிலை – சிறிது
கரம் மசாலா – 1 டீஸ்பூன்
எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

செய்முறை:

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் குடைமிளகாய் மற்றும் எண்ணெய் தவிர, அனைத்தையும் ஒவ்வொன்றாக சேர்த்து நன்கு மணம் வரும் வரை வறுத்து இறக்கி, குளிர வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் அதனை மிக்ஸியில் போட்டு, அத்துடன் கரம் மசாலாவை சேர்த்து பொடி செய்து கொள்ள வேண்டும்.

பின்பு அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், நறுக்கி வைத்துள்ள குடைமிளகாயை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

குடைமிளகாயானது நன்கு வெந்ததும், அத்துடன் அரைத்து வைத்துள்ள பொடியை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.

இறுதியில் அதில் சாதத்தை சேர்த்து, தேவையான அளவு உப்பு தூவி நன்கு பிரட்டி இறக்கினால், குடைமிளகாய் மசாலா சாதம் ரெடி!!!

Related posts

உங்கள் கவனத்துக்கு தூங்குறதுக்கு முன்னாடி வாழைப்பழம் சாப்பிடுறீங்களா?

nathan

உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும் அதி சக்திவாய்ந்த பானம்!தெரிஞ்சிக்கங்க…

nathan

சுவையான கம்பு தயிர் சாதம்

nathan

சூப்பர் டிப்ஸ்! மூலநோயில் இருந்து நிவாரணம் தரும் துத்திக் கீரை!

nathan

இரத்த சிவப்பணுக்களை அதிகரிக்கும் கறிவேப்பிலை பொடி….

nathan

இந்த உணவுகளை உண்பதற்கு முன்/பின் தெரியாம கூட பாலை குடிச்சுடாதீங்க..

nathan

பெண்கள் நீண்ட ஆயுளோடு ஆரோக்கியமாக வாழ இந்த ஒரு பொருளை தினமும் சாப்பிடணுமாம்…

nathan

வாயு தொல்லையை போக்கும் பூண்டு சாதம்

nathan

உங்களுக்கு தெரியுமா மக்காசோளம் சாப்பிட்டு குடிக்கக்கூடாத பழச்சாறுகள் என்னென்ன?..!!

nathan