26.2 C
Chennai
Saturday, Dec 21, 2024
201610151430088033 kanava meen varuval cuttlefish varuval SECVPF
அசைவ வகைகள்

சூப்பரான கணவாய் மீன் வறுவல்

வார விடுமுறைகளில் வித்தியாசமாக என்ன சமையல் செய்யலாம் என்று யோசிப்பவர்கள் கணவாய் மீன் வறுவல் செய்து அசத்தலாம்.

சூப்பரான கணவாய் மீன் வறுவல்
தேவையான பொருட்கள் :

கணவாய் மீன் – 300 கிராம்
இஞ்சி விழுது – 2 மேசைகரண்டி
பூண்டு விழுது – 2 மேசைகரண்டி
வெங்காயம் – 1
கறிவேப்பிலை – 15
தக்காளிப் பழம் – 1
எண்ணெய் – 2 மேசைகரண்டி
கொத்தமல்லி இலை – தேவையான அளவு
பெருஞ்சீரகம் – அரை ஸ்பூன்
கடுகு – அரை ஸ்பூன்
மிளகாய்த் தூள் – 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் – அரை ஸ்பூன்
கரம்மசாலா தூள் – 1 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

செய்முறை:

* வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி இலை இவற்றை சிறிய துண்டுகளாக வெட்டி வைக்கவும்.

* கணவாய் மீனை நன்றாக சுத்தம் செய்து துண்டுகளாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் போட்டு அத்துடன் உப்பு, மிளகாய்த் தூள், கரம்மசாலத்தூள், மஞ்சள் தூள், இஞ்சி, பூண்டு விழுது, இவற்றை சேர்த்து நன்றாக கலந்து அரை மணிநேரம் ஊற வைக்கவும்.

* கடாயை அடுப்பில் வைத்து எண்ணெயை விட்டு காய்ந்ததும் கடுகு, பெருஞ்சீரகம், கறிவேப்பிலை போட்டு தாளித்த பின், வெங்காயத்தை போட்டு நன்றாக வதக்கவும்.

* வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியை போட்டு வதக்கவும்.

* அடுத்து அதில் ஊறவைத்த கணவாய் மீன் கலவையை போட்டு, கலந்து மூடியால் மூடி விடவும். (அடுப்பு நெருப்பையும் மிதமான அளவில் விடவும்)

* 20 நிமிடங்களில் கணவாய் வெந்து விடும். சட்டியில் உள்ள நீர்த்தன்மை முழுவதும் வற்றி எண்ணெய் பிரிந்து டிரையாக, உதிரியாக வரும் போது கொத்தமல்லி இலையும் சேர்த்து ஒரு நிமிடம் மூடி இறக்கி விடுங்கள்.

* சுவையான கணவாய் மீன் பொரியல் ரெடி.

குறிப்பு: இதனை ஒரு வார விடுமுறையில், சனிக்கிழமைகளில் செய்து சாப்பிடுங்கள், காரணம் சிலருக்கு கணவாய் சாப்பிட்டால் வயிற்றுக் கோளாறு ஏற்படுமாம்.201610151430088033 kanava meen varuval cuttlefish varuval SECVPF

Related posts

ருசியான மட்டன் சுக்கா!! சுவையாக செய்வது எப்படி!!

nathan

கிராமத்து கருவாட்டு குழம்பு செய்முறை

nathan

பேக்ட் சிக்கன் : செய்முறைகளுடன்…!​

nathan

மணமணக்கும் மதுரை மட்டன் சுக்கா

nathan

சூப்பரான கீரை வித் சீஸ் முட்டை ஆம்லெட்

nathan

செட்டிநாடு மிளகு கோழி வறுவல்: ரமலான் ஸ்பெஷல் ரெசிபி

nathan

டேஸ்டி சிக்கன் வறுவல்

nathan

கடாய் காளான் மசாலா செய்வது எவ்வாறு…?

nathan

இறால் உருளைக்கிழங்கு ஃபிரை

nathan