காலையில் இட்லி அல்லது தோசைக்கு மிகவும் சிம்பிளாக ஒரு சட்னி செய்ய நினைத்தால், வெங்காய சட்னியை செய்து சாப்பிடுங்கள். இது 5 நிமிடத்தில் செய்யக்கூடிய அட்டகாசமான சட்னி. மேலும் இது கெட்டுப் போகவும் செய்யாது. காலையில் செய்தால், இரவு வரை வைத்து சாப்பிடலாம். பேச்சுலர்களுக்கு ஏற்ற சட்னியும் கூட.
சரி, இப்போது அந்த காரமான வெங்காய சட்னியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!
Spicy Onion Chutney Recipe
தேவையான பொருட்கள்:
வெங்காயம் – 3 (நறுக்கியது)
வரமிளகாய் – 7-8
பொட்டுக்கடலை – 1 டேபிள் ஸ்பூன்
புளிச்சாறு – 1 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
வெல்லம் – 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வரமிளகாய் சேர்த்து 1 நிமிடம் வதக்கி, பின் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.
பின்னர் அதில் பொட்டுக்கடலை, உப்பு, புளிச்சாறு மற்றும் வெல்லம் சேர்த்து 4-5 நிமிடம் மிதமான தீயில் வதக்கி விட வேண்டும்.
Spicy Onion Chutney Recipe
பின்பு அதனை இறக்கி குளிர வைத்து, பின் மிக்ஸியில் போட வேண்டும்.
Spicy Onion Chutney Recipe
பின் அதில் சிறிது தண்ணீர் ஊற்றி நன்கு மென்மையாக அரைத்தால், வெங்காய சட்னி ரெடி!!!
Spicy Onion Chutney Recipe
டிப்ஸ்:
இந்த சட்னியில் புளிச்சாற்றிற்கு பதிலாக எலுமிச்சை சாறு வேண்டுமானாலும் சேர்த்துக் கொள்ளலாம். இதுவும் வித்தியாசமான சுவையைத் தரும்.