24 masala bread upma
ஆரோக்கிய உணவு

சுவையான மசாலா பிரட் உப்புமா

தற்போது பெரும்பாலானோர் வீடுகளில் பிரட் கொண்டு செய்யப்படும் சாண்ட்விச் தான் காலை உணவாகவும், ஸ்நாக்ஸாகவும் உள்ளது. அப்படி எப்போது பார்த்தாலும் சாண்ட்விச் செய்து சாப்பிடுவதற்கு பதிலாக, பிரட் கொண்டு உப்புமா செய்தால், நன்றாக இருக்கும். மேலும் இது ஒரு சிறப்பான காலை உணவாகவும், ஸ்நாஸாகவும் இருக்கும்.

குறிப்பாக மசாலா பிரட் உப்புமாவானது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். அதிலும் மழைக்காலத்தில் சாப்பிட ஏற்றதாக இருக்கும். சரி, இப்போது மசாலா பிரட் உப்புமாவை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

Masala Bread Upma
தேவையான பொருட்கள்:

பிரட் – 3-4 துண்டுகள் (துண்டுகளாக்கிக் கொள்ளவும்)
வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
தக்காளி – 1 (நறுக்கியது)
தக்காளி சாஸ் – 1 டேபிள் ஸ்பூன் (விருப்பமிருந்தால்)
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
கரம் மசாலா – 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
மிளகுத் தூள் – 1/2 டீஸ்பூன் (விருப்பமிருந்தால்)
கொத்தமல்லி – சிறிது
எண்ணெய் – 2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

தாளிப்பதற்கு…

கடுகு – 1/2 டீஸ்பூன்
சீரகம் – 1/2 டீஸ்பூன்
எண்ணெய் – 2 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது

செய்முறை:

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், ‘தாளிப்பதற்கு’ கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளிக்க வேண்டும்.

பின்னர் அதில் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கி, பின் தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.

தக்காளியானது நன்கு மென்மையானதும், அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா, உப்பு மற்றும் தக்காளி சாஸ் சேர்த்து மசாலாக்கள் அனைத்தும் ஒன்று சேரும் வரை வதக்கி விட வேண்டும்.

பிறகு அதில் சிறிது தண்ணீர் ஊற்றி, 2 நிமிடம் கொதிக்க விட வேண்டும். பின் அதில் பிரட் துண்டுகளை சேர்த்து நன்கு பிரட்டி, கொத்தமல்லியைத் தூவி பிரட்டி இறக்கினால், மசாலா பிரட் உப்புமா ரெடி!!!

Related posts

கிராமத்து ஸ்பெஷல் வெந்தய குழம்பு ரெசிபி!!

nathan

குழந்தையின்மைக்கு கேட்பாரற்று கிடைக்கும் விலைமதிப்பற்ற சப்பாத்திகள்ளி பழங்கள்!

nathan

சத்து நிறைந்த அவகோடா டோஸ்ட்

nathan

உடலுக்கு வலுசேர்த்து ஆரோக்கியம் காக்கும் பயறுகள்!

nathan

சூப்பர் டிப்ஸ்! உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த அன்றாட உணவில் கொத்தமல்லி….!

nathan

தெரிஞ்சிக்கங்க… அதிகளவு நார்ச்சத்து நிறைந்துள்ள நட்சத்திர பழத்தின் நன்மைகள்….!!

nathan

தினசரி காபிக்கு பதிலாக வெள்ளை பூசணி சாறு குடிப்பதால் பெறும் நன்மைகள்!!!

nathan

பச்சை மிளகாயை உட்கொள்வதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்

nathan

பெண்களின் உடலுக்கு அத்தியாவசியமான ஊட்டச் சத்துகளில் கால்சியம் முக்கியமானது

nathan