28.5 C
Chennai
Sunday, Dec 15, 2024
ghjhjfj
அசைவ வகைகள்அறுசுவை

சுவையான சில்லி சிக்கன் கிரேவி | chilli chicken gravy

தேவையான பொருட்கள்:
எலும்பில்லாத சிக்கன் – அரை கிலோ
நறுக்கிய வெங்காயம் – 1
நறுக்கிய தக்காளி – 1
நறுக்கிய குடைமிளகாய் – அரை கப்
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 ஸ்பூன்
சோயா சாஸ் – 2 ஸ்பூன்
தக்காளி சாஸ் – 1 ஸ்பூன்
கார்ன் மாவு – 2 ஸ்பூன்
நறுக்கிய பச்சை மிளகாய் – 3
வினிகர் – 1 ஸ்பூன்
மிளகாய் தூள் – 2 ஸ்பூன்
கரம் மசாலா – 1 ஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
ghjhjfj
செய்முறை:

முதலில் சிக்கனை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும்.

பின் அந்த சிக்கனுடன் சோயா சாஸ், வினிகர், உப்பு, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு மிக்ஸ் பண்ணி 20 நிமிடம் ஊற வைக்கவும்.

பின்னர் அதனுடன் 2 ஸ்பூன் கார்ன் மாவை சேர்த்து நன்கு பிரட்டிக் கொள்ளவும்.

பின் கடாயை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், இந்த சிக்கன் துண்டுகளை சேர்த்து பொன்னிறமாக பொரித்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

பின் மற்றொரு கடாயில் எண்ணெயில் இஞ்சி பூண்டு பேஸ்ட், வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கி, பச்சை மிளகாய், குடைமிளகாய் சேர்த்து வதக்க வேண்டும்.

பிறகு அத்துடன் தக்காளி, உப்பு சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்கவும்.

அடுத்து அதில் மிளகாய் தூள், கரம் மசாலா சேர்த்து கிளறி, தக்காளி சாஸ், சோயா சாஸ், வினிகர் சேர்த்து கிளறி, பொரித்து வைத்துள்ள சிக்கனையும் சேர்த்து, எவ்வளவு கிரேவி வேண்டுமோ, அவ்வளவு தண்ணீர் ஊற்றி 5 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.

பின் சிறிது நீரில் சோள மாவை சேர்த்து கலந்து, கிரேவியுடன் ஊற்றி 2 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும்.

இப்போது சுவையான சில்லி சிக்கன் கிரேவி ரெடி

Related posts

மீன் வறுவல்

nathan

அவலை இவ்வாறும் செய்து சாப்பிடலாம்…..

sangika

ரமலான் ஸ்பெஷல்: சிக்கன் மலாய் டிக்கா

nathan

வெங்காய இறால்

nathan

சுவையான இஞ்சி புளி தொக்கு!

sangika

இந்த தீபத் திருநாளில் உங்கள் வீட்டின் பலகாரம்!

nathan

ஆந்திரா ஸ்டைல் இறால் ப்ரை ரெடி!!!

sangika

ஆரோக்கிய கொழுப்பு நிறைந்த கெளுத்தி மீன்

nathan

சுவையான இறால் பிரியாணி

nathan