பொதுவாக புட்டு செய்ய வேண்டுமானால், பச்சரிசி மாவைத் தான் பயன்படுத்துவோம். ஆனால் பச்சரிசி மாவு இல்லாவிட்டால், கோதுமையைக் கொண்டும் புட்டு செய்யலாம். அதிலும் டயட்டில் இருப்போர் காலையில் ஓட்ஸ் மட்டும் தான் சாப்பிட வேண்டும் என்பதில்லை. கோதுமையை கொண்டு செய்யப்படும் புட்டு கூட சாப்பிடலாம்.
இங்கு கோதுமை புட்டு எப்படி செய்வதென்று அதன் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது.
தேவையான பொருட்கள்:
கோதுமை – 500 கிராம்
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
முதலில் கோதுமையை சுத்தம் செய்து, அதனை வாணலியில் போட்டு வறுத்து மிக்ஸியில் மாவாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் அந்த மாவில் உப்பு கலந்த நீரை லேசாக தூவி, புட்டுக்கு பிரட்டுவது போன்று பிரட்டி, இட்லி பாத்திரத்தில் போட்டு வேக வைத்து இறக்கினால், கோதுமை புட்டு ரெடி!!!
இந்த புட்டுடன் துருவிய தேங்காய் மற்றும் சர்க்கரை சேர்த்து சாப்பிட்டால் சூப்பராக இருக்கும்.