24.1 C
Chennai
Monday, Dec 16, 2024
guntur chicken fry 1621670252
Other News

சுவையான குண்டூர் சிக்கன் வறுவல்

தேவையான பொருட்கள்:

* சிக்கன் – 1 கிலோ

* வெங்காயம் – 1 (நறுக்கியது)

* தக்காளி – 1 (நறுக்கியது)

* இஞ்சி பூண்டு விழுது – 1 டேபிள் ஸ்பூன்

* தயிர் – 3 டேபிள் ஸ்பூன்

* மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்

* பச்சை மிளகாய் – 3-4

* கறிவேப்பிலை – சிறிது

* உப்பு – சுவைக்கேற்ப

* எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்

* கொத்தமல்லி – சிறிது

வறுத்து பொடி செய்வதற்கு…

* மல்லி விதைகள் – 1 டேபிள் ஸ்பூன்

* வரமிளகாய் – 2-3

* கடுகு – 1/2 டீஸ்பூன்

* வெந்தயம் – 1/8 டீஸ்பூன்

* மிளகு – 1 1/2 டீஸ்பூன்

* சீரகம் – 1/2 டீஸ்பூன்

* பட்டை – 1 இன்ச்

* கிராம்பு – 2

* துருவிய தேங்காய் – 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

* முதலில் சிக்கனை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும்.

* பின் அதை ஒரு பௌலில் எடுத்து, அதில் தயிரை ஊற்றி, அரை டீஸ்பூன் உப்பு சேர்த்து பிரட்டி, குறைந்தது 30 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் அரை டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், வறுத்து பொடி செய்வதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து நல்ல மணம் வரும் வரை வறுத்து, அதன் பின் துருவிய தேங்காய் மற்றும் சிறிது கறிவேப்பிலை சேர்த்து ஒரு நிமிடம் வறுத்து இறக்கி, குளிர வைத்து, மிக்சர் ஜாரில் போட்டு நீர் ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து ஒரு சிட்டிகை உப்பு தூவி நன்கு வதக்க வேண்டும். பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.

* அடுத்து அதில் தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும். பின் ஊற வைத்துள்ள சிக்கன் துண்டுகளை சேர்த்து நிறம் மாறும் வரை வதக்க வேண்டும்.

* பின் அதில் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து நன்கு கிளறி, அரை கப் நீரை ஊற்றி கிளறி, மூடி வைத்து குறைவான தீயில் சிக்கனை வேக வைக்க வேண்டும். சிக்கன் அடிப்பிடிக்காமல் இருக்க அவ்வப்போது சிக்கனை கிளறி விட வேண்டும். நீர் வற்றி சிக்கன் நன்கு வெந்ததும், மூடியைத் திறந்து, அதில் பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து கிளறி, 2 நிமிடம் குறைவான தீயில் வேக வைத்து இறக்கி கொத்தமல்லியைத் தூவினால், சுவையான குண்டூர் சிக்கன் வறுவல் தயார்.

Related posts

துணிவு படத்தின் மொத்த வசூலையும் இரண்டு நாட்களில் அடித்து நொறுக்கிய லியோ..

nathan

சந்திர கிரகணம் ; செய்ய வேண்டியதும், செய்யக் கூடாததும்

nathan

விவசாயியாக மாறிய நடிகர் கருணாஸ் புகைப்படங்கள்

nathan

அதிரடியாக குறைந்தது தங்கம் விலை..

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…சுகப்பிரசவம் எளிதில் நடைபெற உதவும் சில யோகா நிலைகள்!

nathan

மன அழுத்தத்தில் தவிக்கும் நடிகை மகாலட்சுமி…

nathan

கணவர் விக்கி உடன் சாலையில் நடந்து சென்ற நயன்தாரா

nathan

தெரிஞ்சிக்கங்க…அதிகமா சிக்கன் சாப்பிடுறீங்களா? அப்ப உங்களுக்காக காத்திருக்கும் ஆபத்து இவை தான்!

nathan

அடேங்கப்பா! கவர்ச்சி உடையில் செம்ம ஹாட் போஸ் கொடுத்துள்ள சீரியல் நடிகை..!

nathan