தேவையனவை::
சுடிதார் மெட்டீரியல் • அளவு சுடிதார் • கத்தரிக்கோல் • சாக்பீஸ் (அ) க்ரையான்ஸ் • தையல் மிஷின் • நூல் • இன்ச் டேப்
1.முதலில் முன்கழுத்து பட்டியின் ஒரத்தை கால் இன்ச் அளவு ஒரு மடக்கு மடக்கி, மீண்டும் ஒரு மடிப்பு வைத்து தையல் மிஷினில் ஒரு தையல் போடவும்.
2.இரண்டு கழுத்துப்பட்டி துணியின் இரு ஒரங்களையும் இவ்வாறு மடக்கி தைத்து வைக்கவும். கழுத்துப்பட்டி துணியின் கீழ்ப்பகுதி கரை உள்ளதால் இதனை மடித்து தைக்க வேண்டாம்.
3.இப்போது சுடிதாரில் டிசைன் உள்ள முன்கழுத்து துணியின் மேல், முன்கழுத்து பட்டி துணியை திருப்பி வைத்து ” ப ” வடிவத்திலேயே தைக்க வேண்டும்.
4.பின்னர் இந்த முன்கழுத்து பட்டி துணியை சுடிதாரின் பின்பக்கத்தில் வைக்கும் போது பட்டியின் நல்ல பக்கம் சுடிதாரின் பின்பகுதியில் இருக்கும். முதலில் தைத்த தையலுக்கு கால் இன்ச் தள்ளி மீண்டும் ” ப ” வடிவிலேயே தைக்கவும்.
5.இதேப்போல் சுடிதாரின் பின் கழுத்து பகுதியில், பின் கழுத்துப்பட்டியை வைத்து தைக்க வேண்டும்.
6.அடுத்து சுடிதாரின் கைப்பகுதியின் ஒரங்களை ஒரு இன்ச் அளவு மடித்து தைத்து வைக்கவும்.சுடிதாரின் முன்கழுத்து பக்கத்தை பார்க்கும்போது உங்களுக்கு ஒரத்தை மடித்து தைத்துப்போல் இருக்கும்.
8.அடுத்து வெட்டிவைத்துள்ள சுடிதாரின் முன்பக்கத்தையும், பின் பக்கத்தையும் திருப்பி சோல்டரை ஒன்றாக சேர்த்து வைத்து அரை இன்ச் அளவு விட்டு தைக்கவும்.இரு சோல்டரிலும் 2, 2 தையல்கள் போடவும்.
10.இப்போது கைப்பகுதியை இணைக்க வேண்டும். கைக்குழியின் ஒரத்தில் சுடியின் கைப்பகுதி துணியை வைத்து கால் இன்ச் தள்ளி தையல் போட வேண்டும்.கைப்பகுதி தைத்து முடித்ததும் சுடிதாரின் ஒரங்களை தைக்க வேண்டும். படத்தில் காட்டியுள்ளபடி சாக்பீஸால் முதலில் தைக்க வேண்டிய இடத்தை குறித்துக் கொள்ளவும்.பின்னர் குறித்த இடத்தில் தையல் போட்டுக் கொள்ளவும். இதுப்போல் மற்றொரு பக்கத்திலும் தையல் போட்டு முடிக்கவும்.
11.அடுத்து சுடிதார் டாப்பின் அடி ஓரங்களை தைக்க வேண்டும். முதலில் முன்பக்க அடிப்பகுதியை ஒரு இன்ச் அளவு மடக்கி, மீண்டும் மடிப்பு வைக்கவும். மடித்த ஓரங்களை முதலில் தைத்துக் முடிக்கவும்.இப்போது முதலில் தைத்த தையலுக்கு கீழ் கால் இன்ச் குறைவாக இடைவெளிவிட்டு கீழ் ஒரத்தில் மீண்டும் ஒரு தையல் போடவும். இதேப்போல் சுடிதாரின் பின்பக்கத்தின் அடிப்பகுதியை தைத்து முடிக்கவும்.
12.இனி சுடிதாரின் சைடு ஓபன்களை தைக்க வேண்டும். முன்பக்க சைடு ஒபனை 1/2 இன்ச் அளவு ஒரு மடக்கவும்.
மீண்டும் ஒரு மடிப்பு வைக்கவும். மடித்த ஓரங்களை முதலில் தைத்துக் கொண்டே வரவும்.சைடு ஓபன் ஆரம்பிக்கும் இடம் வந்ததும் துணியை அப்படியே திருப்பிக் கொண்டு பின்பக்க சைடு ஒபனை இதேப்போல் தைத்து முடிக்கவும்.படத்தில் உள்ளது போல் சைடு ஒபனை இவ்வாறு தைத்து முடிக்கவும்.சுடிதார் டாப் ரெடி.