ஏன் இப்படி..?
ஒருவருக்கு வயிறு உப்பி போவதற்கு பலவித காரணிகள் உள்ளன. அவற்றில் நாம் சில அன்றாடம் செய்யும் தவறுகளை மட்டுமே இங்கு பார்க்க போகிறோம்.
நாம் சாப்பிட கூடிய உணவுகளும் இதற்கு ஒரு காரணமாக உள்ளது. இது வாயு தொல்லையையும் உருவாக்க கூடும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
ஏன் இவ்வளவு வேகம்..!
நம்மை கவனித்து கொள்ளவே இங்கு பலருக்கு நேரம் போதவில்லை என்றே சொல்லலாம். ஆமாங்க, எதை சாப்பிட்டாலும் வேக வேகமாக ஒலிம்பிக் போட்டி வீரரை போன்று சாப்பிடுகிறோம். இப்படி உணவை நன்றாக மெல்லாமல் வேகமாக சாப்பிடுவதால் வயிற்று உப்பசத்தை பெற்று விடுவோம்..
ஹார்மோன் மாற்றங்கள்
நமது உடல் சீராக நோய்கள் இன்றி இருக்க வேண்டுமென்றால், அதற்கு ஹார்மோன் சுரத்தலில் எந்தவித பாதிப்பும் இருக்க கூடாது.
ஏனெனில், ஹார்மோன் மாற்றமும் நமது வயிற்று உப்பசத்தை அதிகரிக்க ஒரு முக்கிய காரணம். இது பெண்களுக்கு, அவர்களின் மாதவிடாயை வைத்து தெரிந்து கொள்ளலாம்.
காபியும் உப்பசமும்..!
வயிறு உப்பசத்தை அதிகரிக்க காபி முக்கிய பங்கு வகிக்கிறது. இவற்றில் உள்ள அமிலத்தன்மை தான் இதற்கு முழு காரணம்.
அதிகமாக காபி குடித்தால் நரம்புகளை அதிக அளவில் தூண்டி செரிமான பாதையில் தடையை ஏற்படுத்தும். இதுதான் வயிற்று உப்பசத்தை ஏற்படுத்துகிறது.
சோடாவுக்கு நோ நோ..!
இது ஒரு சில வருடமாக ஒரு ஃபேஷனாகவே வலம் வருகிறது, அதாவது, எதை சாப்பிட்டாலும் அதனுடன் ஒரு கோக் அல்லது பெப்ஸியை இலவசமாக தந்து விடுகின்றனர்.
நாமும் சுவையாக இருக்கிறதே என்பதற்காக குடித்து விடுவோம். ஆனால், இதனால் வயிறு உப்பசம், செரிமான கோளாறு, சர்க்கரை வியாதி போன்றவை உங்களுக்கு பரிசாக கிடைக்கும்.
கடின உணவுகள் வேண்டாமே..!
மிக விரைவில் செரிக்க முடியாத உணவுகளை தொடர்ந்து சாப்பிடுவோருக்கு இந்த வயிற்று உப்பசம் இருக்கும். குறிப்பாக சர்க்கரை சேர்த்த உணவுகள், கார்போஹைட்ரெட் அதிகம் கொண்ட உணவுகள், ஆகியவற்றை சொல்லலாம். இவை செரிமான மண்டலத்தை பாதித்து வயிற்று உப்பசத்தை தரும்.
சின்ன பழக்கம்-பெரிய விளைவு..!
பலருக்கு சுவிங் கம் சாப்பிடும் பழக்கம் பல வருடமாக தொடர்ந்து இருக்கும். இந்த பழக்கம் தான் உங்களின் செரிமான மண்டலத்தில் அதிக வாயுவை உருவாக்கிறது என ஆய்வுகள் சொல்கின்றன.
அத்துடன் இதிலுள்ள செயற்கை இனிப்பூட்டிகளும் மிக முக்கிய காரணமாம். எனவே, இந்த பழக்கத்தை தவிர்ப்பது நல்லது.
எப்போதுமே வாயு உணவுகளா..?
சிலர் எந்த உணவை அதிகம் விரும்புகின்றனரோ, அதைத்தான் தொடர்ந்து சாப்பிட்டு கொண்டே இருப்பார்கள். இது பலவித மாற்றத்தை உங்களின் உடலில் ஏற்படுத்தும்.
குறிப்பாக காலிபிளவர், ப்ரோக்கோலி ஆகியவற்றை சாப்பிடுவதால் இந்த நிலை ஏற்படும்.
குறைந்த நீரா..?
பொதுவாகவே உடலுக்கு நீர்சத்து குறைவாக இருந்தால் எண்ணற்ற நோய்கள் வரிசை கட்டி நிற்கும். அந்த வகையில் இந்த வயிற்று உப்பசமும் இதில் அடங்கும். உடலுக்கு தேவையான நீர் சத்து கிடைக்கவில்லையென்றால் இந்த பிரச்சினை வரும்.
சோறு தான் முக்கியம்..!
சாப்பாட்டை பற்றி பேசினாலே, இப்போது ட்ரெண்டாக உள்ள ஒரு குட்டி பையன் தான் நமக்கெல்லாம் நினைவுக்கு வருவான்.
சாப்பாடு முக்கியம் தான், என்றாலும் எப்போதுமே எதையாவது சாப்பிட்டு கொண்டே இருக்காதீர்கள். இதுவும் வயிறு உப்பசத்திற்கு ஒரு முக்கிய காரணம்.
தூங்குவதற்கு முன் சோறா..?
நம்மில் பலர் இந்த தவறை செய்கின்றோம். தூங்குவதற்கு கொஞ்ச நேரத்திற்கு முன்னர் சாப்பாட்டை சாப்பிட்டால் அவை செரிமானம் அடைய கடினப்படும்.
கூடவே அந்த உணவு சரியாக செரிமானம் அடைவதில்லை. இதுவும், உங்களுக்கு வயிற்று உப்பசத்தை தந்து மோசமான நிலைக்கு தள்ளுகிறது.