23.7 C
Chennai
Wednesday, Dec 18, 2024
fafd8218 2927 4e60 8892 6c2782893631 S secvpf
சைவம்

சாமை அரிசி தேங்காய் சாதம்

தேவையான பொருட்கள் :

சாமை அரிசி சாதம் – 1 கப்
தேங்காய் துருவல் – 1/2 மூடி
சின்ன வெங்காயம் – 1 கைபிடி
பச்சை மிளகாய் / வர மிளகாய் – 3
கடலை பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்
கடுகு, உளுந்த பருப்பு – 1 ஸ்பூன்
நல்லெண்ணை – 2 ஸ்பூன்
கறிவேப்பிலை, கொத்தமல்லி பெருங்காயம், உப்பு

செய்முறை :

• சின்ன வெங்காயத்தை தோல் உரித்து பொடியாக நறுக்கி வைக்கவும்.

• கொத்தமல்லியை பொடியாக நறுக்கி வைக்கவும்.

• மிளகாயை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.

• கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்த பருப்பு, கடலை பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து தாளிக்கவும்.

• கடுகு பொரிந்தவுடன் பச்சை மிளகாய் / வர மிளகாய், மெலிதாக வெட்டிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

• வெங்காயம் வதங்கியவுடன் தேங்காய் துருவல் சேர்த்து வதக்கவும்.

• அடுப்பை மிதமான தீயில் வைத்து இத்துடன் சாமை அரிசி சாதம், உப்பு சேர்த்து கிளறவும்.

• அனைத்தும் நன்றாக கலந்தவுடன் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.

fafd8218 2927 4e60 8892 6c2782893631 S secvpf

Related posts

சிம்பிளான… மோர் குழம்பு

nathan

காலிஃப்ளவர் ரைஸ்

nathan

ராகி பூரி

nathan

விதம் விதமான வெஜிட்டேரியன் கிரேவி

nathan

சத்தான சுவையான சோள ரவைப் பொங்கல்

nathan

சீரக குழம்பு

nathan

குஜராத்தி கதி கிரேவி

nathan

சூப்பரான பாகற்காய் ப்ரை

nathan

மெக்சிகன் ரைஸ்

nathan