பொதுவாக முகத்தில் ஏற்பட கூடிய பிரச்சினைகள் அனைத்தையும் சரி செய்ய நாம் பல வித குறிப்புகளை பயன்படுத்துவோம். அதில் பெரும்பாலும் பழங்களே நிறைந்திருக்கும். ஆனால், உங்கள் முகத்தில் ஏற்பட கூடிய பருக்கள், கருமை, அரிப்பு, கரும்புள்ளிகள் போன்ற பலவித பிரச்சினைகளுக்கு இந்த ஒரு காய் தீர்வை தருகிறது.
அத்துடன் உடலில் உள்ள ஏராளமான நோய்களுக்கும் இது தீர்வை தரவல்லது. சாதாரண காயிற்கு இப்படிபட்ட மகத்துவங்கள் எல்லாம் நிறைந்துள்ளன. வாங்க, அது எந்த காயினு தெரிஞ்சிப்போம்.
இதுக்கும் வரலாறா..?
ஒவ்வொரு பொருளும் இந்த பூமியில் தோன்றியதற்கு பலவித வரலாறுகள் உள்ளன. அதே போன்று இந்த காயை பற்றியும் வரலாறு குறிப்பிடத்தக்கது. ரோமானிய நாட்டில் இருந்துதான் இந்து காய் அறிமுகமானது. பலவகையான மருத்துவ குணங்களும் அழகு குறிப்புகளும் இந்த காயில் உள்ளதாம்.
பருக்களை போக்க
முகத்தின் அழகை பாழாக்கும் தன்மை இந்த பருக்களுக்கு உண்டு. நீங்கள் தினமும் உங்கள் உணவில் இந்த காயை சேர்த்து கொண்டால் முகத்தில் உள்ள பருக்கள் காணாமல் போய்விடும். இதற்கெல்லாம் காரணம் இதிலுள்ள அதிகப்படியான ஜிங்க் தான். மேலும் இதனை அரைத்து முகத்திலும் பூசலாம்.
வயது முதிர்வை தடுக்க..!
முகத்தில் உள்ள சுருக்கங்களை மறைய வைத்தாலே பாதி வயது குறைந்து விடும். இந்த சுருக்கங்களுக்கு தீர்வை தரவல்லது இந்த அற்புத காய். இவற்றில் உள்ள வைட்டமின் சி தான் உங்களை இளமையாக வைத்து கொள்ள பெரிதும் உதவுகிறது.
பொலிவான முடியிற்கு
முடி அதிக பொலிவுடன் மினுமினுக்க வேண்டுமா..? அதற்கு இந்த காய் நன்கு உதவும். இதிலுள்ள வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஏ தான் உங்கள் முடியை பொலிவாக வைத்து கொள்ளும். மேலும், முடியின் வறட்சி தன்மையையும் இது குறைத்து விடும்.
முடி உதிர்வை தடுக்க
எப்போ பார்த்தாலும் முடி கொட்டிக்கிட்டே இருக்க..? என்ன செஞ்சும் இதற்கு தீர்வே கிடைக்கலையா..? இனி கவலையை விட்டு தள்ளுங்க. உங்களின் முடி உதிர்வை தடுத்து நிறுத்தி, அதிகமாக முடியை வளர செய்ய கூடிய பண்பு இந்த காய்க்கு உள்ளதாம்.
சூரிய ஒளி
சூரியனிடம் இருந்து வர கூடிய புற ஊதா கதிர்களால் ஏற்பட கூடிய பாதிப்புகளை இந்த காய் மிக எளிமையாக தடுத்து விடும். உங்களின் சருமத்திற்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாதவறு இந்த காய் உங்களுக்கு பெரிதும் உதவும்.
காரணம் என்ன..?
இத்தனை பயன்களும் இந்த காயில் இருப்பதற்கு காரணம் இதிலுள்ள ஊட்டச்சத்துக்கள் தான். குறிப்பாக வைட்டமின் எ, வைட்டமின் சி, பொட்டாசியம், பாஸ்பரஸ், வைட்டமின் கே, வைட்டமின் ஈ ஆகியவற்றால் தான் இந்த காய் இவ்வளவு மகத்துவம் நிறைந்ததாக உள்ளது. இவ்வளவு நன்மைகள் நிறைந்த காய், ப்ரோக்கோலி தான். நீங்களும் உங்களின் உணவில் ப்ரோக்கோலியை அதிக அளவில் சேர்த்து கொண்டால் மேற்சொன்ன பயன்கள் அனைத்துமே கிடைக்கும்.