201803141212229212 1 chocolatepannacotta. L styvpf
ஆரோக்கிய உணவு

சாக்லெட் பன்னகோட்டா வீட்டிலேயே செய்வது எப்படி?

தேவையான பொருட்கள் :

ஃப்ரெஷ் கிரீம் – 1 கப்,
பால் – 50 மி.லி.,
தண்ணீர் – 2 டேபிள்ஸ்பூன்,
சைனா கிராஸ் – 1 கிராம்,
குக்கிங் சாக்லெட் – 100 கிராம்,
சர்க்கரை – 50 கிராம்,
வெனிலா எசென்ஸ் – 1/4 டீஸ்பூன்.

செய்முறை :

குக்கிங் சாக்லெட்டை பொடியான துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.

அடுப்பில் கடாயை வைத்து அதில் தண்ணீர் ஊற்றி கொதிக்க விட்டு சைனா கிராஸ் சேர்க்கவும்.

சைனா கிராஸ் தண்ணீருடன் நன்கு கலந்து கரையும் நிலைக்கு வரும் வரை கொதிக்க விடவும்.

இன்னொரு கடாயில் கிரீம், பால், சர்க்கரை சேர்த்து மிதமான தீயில், இந்தக் கலவை கரையும் வரை கொதிக்க வைக்கவும்.

நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் இத்துடன் நறுக்கிய சாக்லெட், வெனிலா எசென்ஸ் இரண்டையும் கலந்து சாக்லெட் முழுவதுமாக உருகும் வரை கைவிடாமல் கலக்கவும்.

திக்கான பதம் வந்தவுடன் இந்த கலவையை கண்ணாடி டம்ளர்களில் ஊற்றி 5 மணி நேரம் குளிர வைக்கவும்.

சூப்பரான சாக்லெட் பன்னகோட்டா ரெடி.201803141212229212 1 chocolatepannacotta. L styvpf

Related posts

சுவையான சாதம் கஞ்சி சூப்

nathan

மணம்.. குணம்.. ஆரோக்கியம்.. சக்தி தரும் கடுகு

nathan

சில பொருட்களை கழுவும்போது அதில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் அதிலிருந்து வெளியேற வாய்ப்புள்ளது. இனிமே அந்த தப்ப பண்ணாதீங்க…! 

nathan

வாயு தொல்லை இருந்து விடுபட பூண்டு களி

nathan

தெரிஞ்சிக்கங்க…இலவங்கப் பட்டையின் 20 மருத்துவ குணங்கள்!!!

nathan

சூப்பர் டிப்ஸ்.. உலர் திராட்சையை நீரில் ஊற வைத்து சாப்பிட்டால் கல்லீரல் சுத்தமாகும் என்பது தெரியுமா?

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க… மது அருந்தும் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள்

nathan

சீத்தாப்பழத்தின் 10 ஆரோக்கிய நன்மைகள்! தெரிஞ்சிக்கங்க…

nathan

இதய நோய் ஏற்படும் வாய்ப்பை குறைக்கும் மத்தி மீன்

nathan