சளி, இருமல் தொல்லையால் அவதிப்படுபவர்கள் இந்த கறிவேப்பிலை மிளகுக் குழம்பை செய்து சாப்பிடலாம். இந்த குழம்பை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
சளி, இருமல் தொல்லைக்கு கறிவேப்பிலை மிளகு குழம்பு
தேவையான பொருட்கள் :
உளுந்து – 2 டேபிள் ஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 2
மிளகு – ஒரு டேபிள் ஸ்பூன்
புளி – 40 கிராம்
பெருங்காயத் தூள் – அரை டீஸ்பூன்
கடுகு – 1 டீஸ்பூன்
நல்லெண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை – அரை கப்
எண்ணெய், உப்பு – தேவையான அளவு
செய்முறை :
* புளியை கரைத்து கொள்ளவும்.
* வெறும் வாணலியில் உளுந்து, காய்ந்த மிளகாய், மிளகு, கறிவேப்பிலை ஆகியவற்றை வறுத்து ஆற வைத்து பொடித்துக்கொள்ளுங்கள்.
* வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் கடுகு, பெருங்காயம் சேர்த்துத் தாளித்த, பின்னர் புளிக்கரைசலைச் சேர்த்துக் கொதிக்கவிடுங்கள்.
* புளிக்கரைசல் நன்றாகக் கொதித்ததும், அரைத்த பொடியை அதனுடன் சேர்த்துக் அடுப்பை மிதமான தீயில் வைக்கவும்.
* தேவையான அளவு உப்பு சேர்த்து ஓரங்களில் எண்ணெய் பிரிந்து வரும் போது இறக்கிவைத்துப் பரிமாறுங்கள்.
* கறிவேப்பிலை மிளகுக் குழம்பு ரெடி.