24.5 C
Chennai
Tuesday, Dec 17, 2024
1 1523862705
மருத்துவ குறிப்பு

சர்க்கரை நோயாளிகள் பாதாம் சாப்பிடலாமா? அப்ப இத படிங்க!

இன்று வேகமாக அதிகரித்து வரும் ஒரு நோயாக இருப்பது சர்க்கரை நோய், நம்முடைய வாழ்க்கை முறையினாலும் உணவுப் பழக்கத்தாலும் மிக வேகமாக இந்த நோய் பரவி வருகிறது என்றே சொல்லலாம். ஒரு நாளைக்கு நமக்கு தேவைப்படக்கூடிய சர்க்கரையின் அளவு தெரியாமல் தொடர்ந்து அதிகப்படியான சர்க்கரையை எடுத்துக் கொள்வது அதனை சமாளிக்க அல்லது சீர்படுத்த போதுமான உணவோ அல்லது உடற்பயிற்சியோ செய்யாமல் இருப்பது ஆகியவை நம் உடலில் சர்க்கரை அளவினை அதிகப்படுத்தும்.

ஒரு முறை சர்க்கரை நோய் அதிகரித்து விட்டால் உங்கள் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தலாமே தவிர முற்றிலுமாக குறைக்க முடியாது. வாழ்நாள் முழுமைக்கும் நீங்கள் சர்க்கரை நோயினை மனதில் கொண்டு அதற்கேற்ப உணவுகள் சாப்பிட வேண்டும். ஒரு நாள் தானே ஒரு தடவை மட்டும் என்று உங்களை நீங்களே சமாதானப்படுத்திக் கொண்டு சாப்பிடும் ஒவ்வொரு கவளமும் உங்கள் வாழ்நாளை குறைக்கிறது என்பதை மறக்க வேண்டாம்.

சர்க்கரை நோயாளிகள் பாதாம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்த விரிவான பட்டியல் இதோ

பாதாம் : சர்க்கரை நோயாளிகள் பாதாம் சாப்பிடுவதால் ஏற்படுகிற நன்மைகளை தெரிந்து கொள்வதற்கு முன்னால் பாதாமில் என்னென்ன சத்துக்கள் இருக்கின்றன என்பதை தெரிந்து கொண்டுவிடுங்கள்.   ஒவ்வொரு நூறு கிராம் பாதாமிற்கும் கார்போஹைட்ரேட்21 கிராம், கொழுப்பு49 கிராம்,ப்ரோட்டீன் 21 கிராம்,தியாமின் 0.211மில்லி கிராம், நியாசின் 3.385 கிராம்,கால்சியம் 264 கிராம்,காப்பர் 0.99 மில்லி கிராம்,மக்னீசியம் 268 மில்லிகிராம் பாஸ்பரஸ் 484 மில்லி கிராம், பொட்டாசியம் 705 மில்லிகிராம், சோடியம் 1 மில்லிகிராம்,ஜிங்க் 3.08 மில்லி கிராம்,பேண்டோதெனிக் அமிலம் 0.469 மில்லி கிராம் என ஏரளமான சத்துக்கள் நிறைந்திருக்கிறது.

உணவு : எப்போதும் நீங்கள் உணவு சாப்பிட்டவுடன் உங்கள் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும். ஏனென்றால் நாம் சாப்பிடுகிற உணவில் அதிகப்படியாக கார்போஹைட்ரேட் தான் இருக்கிறது. இதனால் நம் சர்க்கரை அளவு அதிகரிக்கும். அந்த நேரத்தில் நீங்கள் இரண்டு பாதாம் சாப்பிடலாம். பாதாமில் கார்போஹைட்ரேட் அதிகமாக இருக்கிறது என்றாலும் இவை உங்களுடைய இன்ஸுலின் சுரப்பினை கட்டுப்படுத்தும்.

கலோரி : ஜங்க் உணவுகளை சாப்பிடுவதில் இருக்கிற மிக முக்கியமான பிரச்சனை அதிக அதிகமான கலோரி கொண்டதாக இருப்பது தான். அதைச் சாப்பிட்டால் சாப்பிட்ட நிறைவே கிடைக்காது என்பதால் தொடர்ந்து அதனை சாப்பிட்டுக் கொண்டேயிருக்க வேண்டும் என்ற உணர்வு மேலோங்கும். பாக்கெட் உணவுகளை சாப்பிடாமல் தவிர்க்க வேண்டுமென்றால் நீங்கள் ஒரு அவுன்ஸ் பாதம் எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு அவுன்ஸ் என்பது 45 பாதாம்.

ஏன் பாதாம்? : இவையே உங்களுக்கு போதுமான அளவு கலோரியை கொடுத்துவிடுவதால் மேற்கொண்டு சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் தோன்றாது. இதனால் ஜங்க் ஃபுட் சாப்பிடுவதை தவிர்க்கலாம். இது சர்க்கரை நோயாளிகளுக்கு மட்டுமல்ல பிறருக்கும் நல்லது. சர்க்கரை நோயாளிகள் ஒவ்வொரு உணவை உட்கொள்ளும் போதும் அந்த உணவில் கலந்திருக்கும் மூலப்பொருள் என்ன? அதில் என்னென்ன கலந்திருக்கிறார்கள் ஆகியவற்றை அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்.

இன்ஸுலின் : சர்க்கரை நோய் பாதித்தவர்களுக்கு மட்டுமே பாதாம் பயன் தரும் என்பது அர்த்தமன்று. சர்க்கரை நோய் வராமல் தவிர்க்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு பாதாம் ஓர் அருமருந்தாகும். ப்ரீ டயப்பாட்டீஸ் இருப்பவர்கள் பாதாம் கண்டிப்பாக சாப்பிட வேண்டும். இது இன்ஸுலின் சுரப்பை கட்டுப்படுத்தி சர்க்கரை அளவினை இன்னும் அதிகப்படுத்தாமல் வைத்திருக்கும்.

மக்னீசியம் : பாதாமில் சற்று அதிகமாக இருக்கக்கூடிய சத்துக்களில் முதன்மையானது மக்னீசியம். உங்கள் உடலில் போதுமானளவு மக்னீசியம் இருந்தால் டைப் 2 டயப்பட்டீஸ் பிரச்சனை வராமல் தவிர்க்க முடியும். அதே நேரத்தில் சர்க்கரை நோய் இருப்பவர்களுக்கு தங்கள் உடலில் மக்னீசியம் சீக்கிரம் கரையும். அவர்களது சிறுநீர் வழியாக மக்னீசியம் சத்து வெளியியேறிடும். இவர்களுக்கு பாதாம் நல்ல பலன் அளிக்கக்கூடியது.

இதயம் : சர்க்கரை நோய் வந்து விட்டாலே கூடிய விரைவில் இதயம் தொடர்பான பிரச்சனைகள் தானாக வந்து சேர்ந்துவிடுகிறது. இதயம் தொடர்பான பிரச்சனை இருந்தாலும் சரி அல்லது சர்க்கரை நோ இருந்தாலும் சரி நீங்கள் பாதாம் சாப்பிடலாம். பாதாமில் மோனோஅன்சாச்சுரேட்டட் கொழுப்பு இருக்கிறது. இது கெட்ட கொழுப்பினை நீக்க உதவிடும். கெட்ட கொழுப்பு தான் மாரடைப்பு ஏற்படுவதற்கும் அடைப்பு ஏற்படுவதற்கும் முக்கிய காரணியாக இருக்கிறது.

உடல் எடை : என்ன சாப்பிடுகிறோமோ இல்லையோ உடல் எடையை கட்டுப்பாட்டில் வைத்திருப்பது அவசியமான ஒன்றாகும். இந்த பாதாம் உடல் எடையை குறைக்கவும் உதவிடுகிறது. உடல் எடை குறைத்தால் இது சர்க்கரை நோய் ஏற்படுகிற வாய்ப்புகளை குறைத்திடும்.

பாதாம் பால் : பாதாமிலிருந்து சுவையான பாதாம் பால் எடுக்கப்படும். தினமும் இந்த பாலை நீங்கள் குடிக்கலாம். இந்த பால் கூட சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. பாதாம் பால் தவிர வேறு பால் வேண்டுமானால் சோயா பால் குடிக்கலாம்.

கார்ப்ஸ் : சர்க்கரை நோயாளிகளுக்கு கார்போஹைட்ரேட் குறைவான உணவையே எடுத்துக் கொள்ளச் சொல்வார்கள். கார்போஹைட்ரேட் நிறைந்த உணவை எடுத்துக் கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் அவை சட்டென உங்கள் ரத்தத்தில் சர்க்கரை அளவை உயர்த்தாமல் இருக்கும்படியான உணவாக பார்த்துக் கொள்ளுங்கள். சர்க்கரை நோயாளிகள் அரிசி உணவை சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.

பாதாம் நல்லது : இந்த பிரச்சனையுடன் உணவை எடுத்துக் கொள்ள தயங்குகிறவர்களுக்கு பாதாம் மிகச்சிறந்த உணவாகும். பாதாம் மாவுப்பொருளாக பயன்படுத்தப்படுகிறது. இதில் குறைவான கலோரியே இருக்கிறது. அதோடு இதில் இருக்கக்கூடிய கார்போஹைட்ரேட் உடனடியாக ரத்தத்தை அதிகப்படுத்தாது ஆகையால் சர்க்கரை நோயாளிகளுக்கு இது பெஸ்ட் சாய்ஸ்.

1 1523862705

Related posts

மலச்சிக்கலை இல்லாமலே செய்யும் வாழைப்பழம்….!!!

nathan

சூப்பர் டிப்ஸ்! கல்லீரல் நோய்களைக் குணப்படுத்த அருமையான வழிகள்!!!

nathan

தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க பாதுகாப்பான வழிமுறைகள் மற்றும் முதலுதவி

nathan

ஆண்களே தெரிஞ்சிக்கங்க…சிறுநீரக கற்கள் உருவாகாமல் தடுக்க தவிர்க்க வேண்டிய 10 உணவுகள்

nathan

உங்களுக்கு தெரியுமா இந்த ஒரு பழம் சாப்பிட்டா போதும் புற்றுநோயை வராமல் தடுக்க முடியும்!

nathan

உங்களுக்கு மாரடைப்பு வரக்கூடாதா? தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் உயர் இரத்த அழுத்தம்! தெரிந்துகொள்வோமா?

nathan

உங்களுக்கு தெரியுமா உடலில் கொலஸ்ட்ரால் குறைய நீங்கள் செய்ய வேண்டிய விஷயங்கள் இவைதான்!!

nathan

நீங்கள் மருந்து, மாத்திரைகளை சரியாகத்தான் பயன்படுத்துகிறீர்களா

nathan