ஆப்பிள் என்பது நமது ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் ஒரு பழமாகும். இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் அதிகம் சாப்பிடப்படும் பழமாக ஆப்பிள் உள்ளது. அதன் தனிச்சிறப்பு வாய்ந்த பண்புகளின் காரணமாக இது ஒரு மேஜிகல் பழம் என்றும் அழைக்கப்படுகிறது.
இதில் போதுமான அளவு ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் நோய் எதிர்ப்பு கூறுகள் உள்ளன. சிலர் நீரிழிவு நோயாளிகள் ஆப்பிள் சாப்பிட்டால் சர்க்கரை அளவு அதிகரிக்கும் இன்று கூறுவது உண்டு. இது உண்மையா என்பது குறித்து பார்க்கலாம் வாங்க..
நன்மைகள்:-
ஆப்பிளில் பல நன்மைகள் காணப்படுகின்றன. இவை உடலில் புதிய செல்கள் உருவாவதை ஊக்குவிக்கின்றன. சர்க்கரை நோய் அபாயத்தைக் குறைப்பதில் ஆப்பிள் நன்மை பயக்கும். மேலும் இது உடலில் இரத்த சர்க்கரை அளவையும் கட்டுப்படுத்தும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
பெக்டின் போன்ற நன்மை பயக்கும் நார்ச்சத்து ஆப்பிளில் உள்ளது. தினமும் ஒரு ஆப்பிளை சாப்பிட்டால் புற்றுநோய், உயர் இரத்த அழுத்தம், சர்க்கரை நோய் மற்றும் இதயம் தொடர்பான நோய்கள் ஏற்படும் அபாயத்தை குறைக்கின்றது.
ஆப்பிளில் உடலுக்கு தேவையான வைட்டமின் சி சீரான அளவில் உள்ளது. இதனுடன் இரும்புச்சத்தும் இதில் அதிகமாக காணப்படுகின்றன. இவை அனைத்தும் இணைந்தால் எலும்புகளுக்கு பலம் கிடைக்கும்.
ஆப்பிளில் இரும்பு சத்து அதிகமாக உள்ளதால் ரத்த சோகை வராமல் தடுக்க உதவியாக இருக்கின்றது. ஆகவே ரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் ஒரு ஆப்பிளை தாராளமாக சாப்பிட்டு வரலாம்.