சர்க்கரை நோயாளிகள், வயதானவர்கள் அடிக்கடி உணவில் கோதுமை சேர்த்து கொள்ளவது நல்லது. இன்று கோதுமை ரவையை வைத்து பிசிபேளாபாத் செய்முறையை பார்க்கலாம்.
சர்க்கரை நோயாளிகளுக்கான கோதுமை ரவை பிசிபேளாபாத்
தேவையான பொருட்கள் :
கோதுமை ரவை – 100 கிராம்,
துவரம் பருப்பு – 50 கிராம்,
பிசிபேளாபாத் பவுடர் – 2 டேபிள்ஸ்பூன்,
பச்சை பட்டாணி – 30 கிராம்,
கரைத்த புளி – 2 ஸ்பூன்
பச்சை பச்சை – 3
கொத்தமல்லி – சிறிதளவு,
வெங்காயம் – 3
தக்காளி – 3,
நறுக்கிய கேரட், பீன்ஸ், முருங்கைக்காய் – 2 கப்,
உப்பு – தேவையான அளவு.
தாளிக்க:
கடுகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, முந்திரி,
நெய் – தேவையான அளவு.
செய்முறை:
* துவரம் பருப்பை நன்றாக கழுவி 30 நிமிடங்கள் ஊறவைத்து பிரஷர் குக்கரில் வைத்து வேக வைத்து இறக்கி வைக்கவும்.
* கோதுமை ரவையை வெறும் கடாயில் போட்டு வாசனை வரும் வரை வறுத்து குக்கரில் போட்டு 2 விசில் போட்டு வேக வைத்து கொள்ளவும்.
* கொத்தமல்லி, தக்காளி, காய்கறிகள், வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து நெய்விட்டு சூடானதும் தாளிக்கும் பொருட்களைச் சேர்த்து பொன்னிறமாக தாளித்த பின் வெங்காயத்தை போட்டு வதங்கவும்.
* வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியை சேர்த்து வதக்கவும்.
* தக்காளி நன்றாக வதங்கியதும் பட்டாணி, காய்களை சேர்த்து வேகவைக்கவும்.
* காய்கறிகள் நன்றாக வதங்கியதும் புளிக் கரைசல், உப்பு, பிசிபேளாபாத் பவுடர் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டுக் கொதிக்கவிடவும்.
* 10 நிமிடங்கள் கழித்து வேகவைத்த பருப்பு, கோதுமை ரவை இரண்டையும் சேர்த்துக் 5 நிமிடம் கிளறவும்.
* கடைசியாக கொத்தமல்லி தூவி இறக்கி பரிமாறவும்.