25.7 C
Chennai
Sunday, Dec 29, 2024
22 1434964979 5 sunlight1
சரும பராமரிப்பு

சரும ஆரோக்கியத்தைப் பாதிக்கும் அன்றாட விஷயங்கள்!!!

இக்காலத்தில் விரைவில் சருமம் முதுமைத் தோற்றத்தைப் பெறுவதற்கு குறிப்பிட்ட சில காரணிகள் காரணமாக இருக்கறிது. அதில் நாம் மேற்கொள்ளும் சரும பராமரிப்பு மட்டுமின்றி, நம் பழக்கவழக்கங்கள், சுற்றுச்சூழல் போன்றவையும் குறிப்பிடத்தக்கவை. இத்தகையவற்றால் சரும செல்கள் பாதிக்கப்பட்ட, சருமத்தின் பொலிவை இழந்து, மோசமானதாக வெளிக்காட்டுகிறது.

அதுமட்டுமின்றி, சருமத்தில் பருக்கள், கரும்புள்ளிகள், சரும வறட்சி, சரும வெடிப்புக்கள், பொலிவிழந்த கண்கள் போன்ற பிரச்சனைகளையும் அதிகமாக சந்திக்க நேரிடுகிறது. எனவே கண்மூடித்தனமாக சருமத்திற்கு வெறும் பராமரிப்புக்களை மட்டும் மேற்கொள்வதைத் தவிர்த்து, சருமத்தில் பிரச்சனைகள் வருவதற்கு காரணம் என்னவென்று தெரிந்து கொண்டு, அவற்றை சரிசெய்து கொள்ள வேண்டும்.

சரி, இப்போது சருமத்தின் ஆரோக்கியத்தைப் பாதிக்கும் அன்றாட விஷயங்கள் என்னவென்று பார்ப்போமா!!!

சூரியக்கதிர்கள்

சூரியக்கதிர்கள் நம் சருமத்தின் மீது அளவுக்கு அதிகமாக படுமாயின், அதனால் சரும புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. ஏனெனில் ஓசோன் மண்டலம் கிழிந்துவிட்ட நிலையில், சூரியக்கதிர்களின் தாக்கம் கடுமையாக இருப்பதால், அதனால் சரும செல்கள் பாதிக்கப்பட்டு, புற்றுநோய் செல்களின் வளர்ச்சி அதிகரித்து, சரும புற்றுநோய் ஏற்படும். அதுமட்டுமின்றி, சூரியக்கதிர்கள் உடலில் உள்ள நீரை முற்றிலும் உறிஞ்சிவிடுவதால், சரும வறட்சி அதிகமாகும்.

சுற்றுச்சூழல் காரணிகள்

தற்போது மாசடைந்த உலகில் வாழ்ந்து வருகிறோம். அதுவும் சுவாசிக்கும் காற்று, குடிக்கும் நீர் என அனைத்தும் மாசடைந்துள்ளது. இப்படி மாசடைந்த காற்றை சுவாசித்து, மாசடைந்த நீரை பயன்படுத்தி வந்தால், அதனால் சரும ஆரோக்கியம் முற்றிலும் பாழாய் போய், அதனால் பல்வேறு சரும பிரச்சனைகளை சந்திக்கக்கூடும்.

உணவுப் பழக்கங்கள்

தற்போது ஆரோக்கியமான உணவிற்கு பதிலாக ஜங்க் உணவை உட்கொள்வோரின் எண்ணிக்கை தான் அதிகம். ஆனால் இவற்றைத் தவிர்த்து ஆரோக்கியமான உணவுகளை உட்கொண்டு வந்தால், சரும செல்களுக்கு போதிய ஊட்டச்சத்துக்கள் கிடைத்து, சருமம் ஆரோக்கியமாக இருக்கும்.

கெட்ட பழக்கவழக்கங்கள்

புகைப்பிடித்தல் சருமத்தை பாதிக்குமா? ஆம், நிச்சயம் புகைப்பிடிப்பது சருமத்தை ஆரோக்கியத்தைக் கெடுக்கும். அதேப் போல் மது அருந்துதலும் சருமத்தை பாதிக்கும். அதுமட்டுமின்றி, போதிய தூக்கத்தை மேற்கொள்ளாமல் இருந்தாலும், சரும ஆரோக்கியம் பாழாகிவிடுவதோடு, விரைவில் முதுமைத் தோற்றத்தையும் பெற வைக்கும்.

க்ரீம்கள்

சிலர் சருமத்திற்கு போதிய பாதுகாப்பு வழங்குகிறேன் என்று, கண்ட க்ரீம்களை வாங்கி பயன்படுத்துவார்கள். ஆனால் உண்மையில் அப்படி பயன்படுத்தும் க்ரீம்களால், சருமத்தின் ஆரோக்கியம் தான் பாழாகும். எனவே கண்ட க்ரீம்களை பயன்படுத்துவதற்கு பதிலாக, வீட்டு சமையலறையில் இருக்கும் பொருட்களைக் கொண்டு பராமரித்தாலே, சருமம் ஆரோக்கியமாக இருக்கும்.
22 1434964979 5 sunlight1

Related posts

பனிக்காலத்தில் ஆரோக்கியமும் அழகும்

nathan

சோர்வை போக்கி சருமத்தை பொலிவாக்கும் வழிமுறைகள்

nathan

தழும்பை போக்க விட்டமின் ஈ யை எப்படி பயன்படுத்தலாம்?

nathan

கொரிய அழகிகளின் இந்த ஃபேஸ்பேக்குகளை நீங்க யூஸ் பண்ணா… ஜொலிக்கும் சருமத்தை பெறலாமாம்!

nathan

பாதவெடிப்பை நீக்கி பாதங்களை மென்மையாக வைத்திருக்க உதவும் சூப்பர் டிப்ஸ் …!

nathan

பிரசவ தழும்புகளை சரி செய்வது எப்படி?.!!

nathan

அழகு உங்கள் கையில்

nathan

சருமத்தை க்ளீன் அண்ட் கிளியரா வச்சுக்க என்ன பண்ணலாம்?

nathan

கழுத்தில் கருவளையம்

nathan