26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
201701181039540624 banana protect beauty of the skin SECVPF
சரும பராமரிப்பு

சரும அழகை காக்கும் வாழைப்பழம்

வாழைப்பழம் கருவளையங்கள், தழும்புகளை நீக்கவல்லது. இந்தப் பழத்தில் கொட்டிக்கிடக்கும் அழகு சார்ந்த நன்மைகளை கீழே விரிவாக பார்க்கலாம்.

சரும அழகை காக்கும் வாழைப்பழம்
வாழைப்பழம், `விட்டமின் இ’ சத்து நிறைந்தது. கருவளையங்கள், தழும்புகள் நீக்கவல்லது என்பதோடு, பாதங்களுக்கும் நலம்புரியும். இந்தப் பழத்தில் கொட்டிக்கிடக்கும் அழகு சார்ந்த நன்மைகளை பார்க்கலாம்.

* இரண்டு துண்டுகள் வாழைப் பழத்துடன் இரண்டு டீஸ்பூன் பால் சேர்த்து அரைக்கவும். இதை கண்களைச் சுற்றி அப்ளை செய்து 10 நிமிடங்களுக்கு மசாஜ் கொடுத்து, பின்னர் கழுவவும். இவ்வாறு தொடர்ந்து செய்துவர. நாளடைவில் கருவளையங்கள் நீங்கும்.

* வெள்ளரி, தக்காளி, வாழைப் பழம், உருளைக்கிழங்கு. இவை அனைத்தையும் ஸ்லைஸ் செய்து ஃப்ரிட்ஜில் வைக்கவும். குளிர்ந்ததும் அவற்றை எடுத்து, மூடிய கண்களின் மேல் ஒவ்வொன்றையும் ஒன்றன் பின் ஒன்றாக இரண்டு நிமிடங்களுக்கு வைத்து எடுக்கவும். கணினி திரையில் வேலைசெய்வதால் ஏற்படும் கண் எரிச்சல் நீங்கவும், கண்கள் வறட்சியடையாமல் தவிர்க்கவும் இந்த `ஸ்லைஸ் ட்ரீட்மென்ட்’ கைகொடுக்கும்.

* உடல் இளைப்பவர்கள், பிரசவம் ஆன பெண்கள், உடற்பயிற்சி செய்பவர்கள் இவர்களுக்கு எல்லாம் உடலில் ஸ்ட்ரெட்ச் மார்க்ஸ் ஏற்படும். நான்கு துண்டுகள் வாழைப்பழத்துடன் இரண்டு டீஸ்பூன் ஓட்ஸ் சேர்த்துக் கலந்து தினமும் அந்தத் தழும்புகள் மேல் தடவி வந்தால், நாளடைவில் மறையும்.

* ஒரு வாழைப்பழத்துடன் கால் கப் உருளைக்கிழங்கு சாறு கலந்து முழு பாதத்துக்கும் `பேக்’ போடவும். ஒரு மணி நேரம் கழித்து வெந்நீரில் கழுவினால். வெடிப்பு, சொர சொரப்பு நீங்கிய மிருதுவான பாதங்கள் உங்களுக்கு சொந்தம்.

* ஒரு வாழைப்பழம், இரண்டு டீஸ்பூன் பால், கால் டீஸ்பூன் பயத்த மாவு, கால் டீஸ்பூன் கடலை மாவு, ஒரு டீஸ்பூன் சந்தனம். இவை அனைத்தையும் ஒன்றாகக் கலக்கவும். உடலில் முதலில் நல்லெண்ணெய் மசாஜ் கொடுத்து, பின்னர் இந்தக் கலவையை அப்ளை செய்து, மசாஜ் கொடுத்து குளிக்கவும். இவ்வாறு செய்தால் சரும நிறம் சீராக இருக்கும்; ஆங்காங்கே கறுப்பாக மாறுவதைத் தவிர்க்கலாம். இதை வாரம் ஒரு முறை செய்யலாம்.

* நான்கு துண்டுகள் வாழைப்பழம், நான்கு துண்டுகள் பப்பாளி, இரண்டு டீஸ்பூன் பாதாம் பொடி, கால் கப் தேங்காய்ப்பால், சிறிது குங்குமப்பூ. இவை அனைத்தையும் ஒன்றாகக் கலக்கவும். முழு கழுத்துக்கும் அதை `பேக்’ போட்டு அலசவும். தைராய்டு பிரச்சனையால் கழுத்து கருப்பு அடைந்தால், இது நீக்கும். மேலும், இடுப்புப் பகுதியில் உள்ளாடை காரணமாக ஏற்படும் கருப்படைதலையும் இது போக்கும்.201701181039540624 banana protect beauty of the skin SECVPF

Related posts

கருப்பாக இருப்பவர்களுக்கு வீட்டில் செய்யக்கூடிய இயற்கை பியூட்டி டிப்ஸ்

nathan

அழகு குறிப்புகள்:சரும பாதிப்பை தடுக்க…

nathan

கழுத்து கருமை நீங்க எளிய இயற்கை குறிப்புகள்

nathan

ஆரஞ்சு பழத்தை வைத்து சருமம், கூந்தலை பராமரிக்கும் முறைகளை பார்க்கலாம்.

nathan

எப்பவுமில்லாம உங்க சருமம் புதுசா ஜொலிக்கனுமா? இந்த ஒரு ரெசிபி ட்ரை பண்ணுங்க!!

nathan

சருமத்தின் அழுக்கு, எண்ணெய் பிசுபிசுப்பை நீக்கும் பப்பாளி

nathan

உங்களுக்கு தெரியுமா ஐந்தே நாட்களில் முழங்கால் மற்றும் மூட்டு வலியை குணமாக்கும் அற்புத பானம்!

nathan

சருமம் பாதிக்கப்படாமல் பாதுகாக்க டிப்ஸ்

nathan

மிருதுவான சருமத்துக்கு மோர் குளியல்

nathan