201607250853049854 Nutrientrich Moringa murungai keerai soup SECVPF
ஆரோக்கிய உணவு

சத்து நிறைந்த முருங்கை கீரை சூப்

முருங்கைக்கீரை மிகவும் சத்து நிறைந்தது. பெண்களின் மாதவிடாய் பிரச்சனைகளுக்கு தீர்வு தரும். இதனை வாரம் மூன்று முறை செய்து சாப்பிடுவது மிகவும் நல்லது.

சத்து நிறைந்த முருங்கை கீரை சூப்
தேவையான பொருட்கள் :

எண்ணெய் – 1 தேக்கரண்டி
சீரகம் – 1/2 தேக்கரண்டி
பூண்டு – 7
இஞ்சி – சிறிய துண்டு
வெங்காயம் – 2
தக்காளி – 1
முருங்கை இலை – 1 கப்
தண்ணீர் – தேவையான அளவு
உப்பு, மிளகு – தேவையான அளவு

செய்முறை :

* வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* இஞ்சியை துருவிக் கொள்ளவும்.

* பூண்டை நசுக்கி வைக்கவும்.

* ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகம், பூண்டு, துருவிய இஞ்சி, போட்டு தாளித்த பின் வெங்காயத்தை போட்டு நன்றாக வதக்கவும்.

* வெங்காயம் வதங்கிய பின்னர் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.

* பிறகு முருங்கை இலைகளை சேர்த்து 5 நிமிடம் வதக்கிய பின்னர் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து ஒரு 10 நிமிடம் வேக விடவும்.

* கடைசியாக உப்பு மற்றும் மிளகு தூள் சேர்த்து பரிமாறவும்.

* இந்த சூப் மிகவும் சத்து நிறைந்தது. வாரம் மூன்று முறை இந்த சூப் செய்து குடிப்பது மிகவும் நல்லது.201607250853049854 Nutrientrich Moringa murungai keerai soup SECVPF

Related posts

பொரி சாப்பிட்டா இவ்வளவு பலன் இருக்கா?

nathan

பிராய்லர் சிக்கனும் அதனால் ஏற்றப்படும்கொடிய சிக்கலும்!!

nathan

4 வாரம் கொள்ளு சூப் சாப்பிடுங்க…சூப்பர் டிப்ஸ்..

nathan

உங்களுக்கு இயற்கை உணவுகள் உங்களுக்கு பிடிக்குமா? இத ட்ரை பண்ணி பாருங்க,…

nathan

கொழுப்பு குறைவாக உள்ள புடலங்காய்: கண்டிப்பாக சாப்பிடுங்கள்

nathan

தக்காளி ஜூஸ்

nathan

இட்லி சாப்பிடுங்கள்!

nathan

தினசரி பாலில் கொஞ்சம் பெருஞ்சீரகம் சேர்ப்பதால் இத்தனை நன்மைகள் கிடைக்குமா?

nathan

உங்களுக்கு தெரியுமா இஞ்சியில் ஒழிந்திருக்கும் அற்புத மருத்துவ குணங்கள்..!

nathan