இட்லி, தோசைக்கு தொட்டுக் கொள்ள சுவையான சத்தான கொள்ளு பொடி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
சத்தான சுவையான கொள்ளு பொடி
தேவையான பொருட்கள் :
கொள்ளு – ஒரு கப்,
உளுத்தம்பருப்பு – அரை கப்,
காய்ந்த மிளகாய் – 15,
பெருங்காயம் – ஒரு சிறு துண்டு,
கொப்பரைத் துருவல் – கால் கப்,
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
* வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு உளுத்தம்பருப்பை பொன்னிறமாக வறுத்து எடுக்கவும்.
* பெருங்காயத்தை பொரித்தெடுக்கவும். காய்ந்த மிளகாயை நிறம் மாறாமல் வறுத்தெடுக்கவும்.
* கொப்பரைத் துருவலை சிவக்க வறுக்கவும்.
* கொள்ளை சுத்தம் செய்து வெறும் வாணலியில் மொறுமொறுப்பாக வறுத்தெடுக்கவும்.
* வறுக்கப்பட்ட அனைத்துப் பொருட்களும் ஆறியதும் மிக்சியில் போட்டு உப்பு சேர்த்து சற்று கொரகொரவென்று பொடிக்கவும்.
* இந்தப் பொடியுடன் நல்லெண்ணெய் கலந்து இட்லி, தோசைக்கு தொட்டுக் கொண்டால். அசத்தல் சுவையில் இருக்கும். சூடான சாத்தில் எண்ணெய் விட்டு இதை கலந்து சாப்பிடலாம்.