26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
wrinkles
முகப் பராமரிப்பு

உங்களுக்கு தெரியுமா க்ரீன் டீயின் மூலம் கிடைக்கும் அழகு நன்மைகள்!!!

அழகாக இருக்க இணையதளத்தில் தேடும் போது, பல செய்திகளில் க்ரீன் டீ குடிக்குமாறு பரிந்துரைப்பதைப் படித்திருப்பீர்கள். அது உண்மையே. ஆய்வு ஒன்றிலும், க்ரீன் டீ குடிப்பதால், உடலினுள் மட்டுமின்றி, உடலின் வெளிப்புறமும் ஆரோக்கியமாக இருக்கும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும் பலருக்கும் க்ரீன் டீ குடிப்பதால், உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றி மட்டும் தான் தெரியும். அதன் அழகு நன்மைகள் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

ஆகவே தமிழ் போல்ட் ஸ்கை அன்றாடம் க்ரீன் டீ குடிப்பதால் கிடைக்கும் அழகு நன்மைகளை பட்டியலிட்டுள்ளது. க்ரீன் டீயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் வளமாக நிறைந்துள்ளதால், இதனை குடிப்பதன் மூலம் பாதிக்கப்பட்ட சரும செல்கள் புதுப்பிக்கப்படும் மற்றும் புதிய செல்கள் உற்பத்தி செய்யப்படும். இதனால் நாளுக்கு நாள் அழகும் அதிகரிக்கும். சரி, இப்போது தினமும் க்ரீன் டீயைக் குடிப்பதன் மூலம் கிடைக்கும் அழகு நன்மைகள் என்னவென்று பார்ப்போமா!!!

எடை குறைவு

வாழ்க்கை முறையில் மாற்றங்களை ஏற்படுத்தாமல், உடல் எடையைக் குறைக்க நினைத்தால், அதற்கு க்ரீன் டீ குடிப்பது தான் சிறந்த வழி. க்ரீன் டீ குடிப்பதன் மூலம், உடலில் உள்ள நச்சுக்கள் அனைத்தும் வெளியேறிவிடும். அத்துடன் உடற்பயிற்சியை செய்து வந்தால், உடலில் உள்ள கொழுப்புக்கள் விரைவில் கரைந்துவிடும். இதன் மூலம் உடல் எடை குறையும். உடல் எடை குறைந்தால், தானாக அழகாக காணலாம்.

சுருக்கங்கள்

க்ரீன் டீயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளது. இதனால் சூரியனின் புறஊதாக்கதிர்களால் சரும செல்கள் பாதிக்கப்படுவது தடுக்கப்பட்டு, சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படுவது தடுக்கப்படும்.

பருக்கள்

க்ரீன் டீயில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் பொருள், பருக்களை தூண்டும் ஹார்மோன்களை குறைத்து, பருக்கள் ஏற்படுவதைத் தடுக்கும்.

ஆரோக்கியமான கூந்தல்

க்ரீன் டீயின் நன்மைகளை குடிப்பதன் மூலம் மட்டும் தான் பெற முடியும் என்பதில்லை. அதனைக் கொண்டு கூந்தலை அலசுவதன் மூலம், அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மயிர்கால்களை வலிமையடையச் செய்து, கூந்தல் உதிர்தலைத் தடுத்து, அதன் வளர்ச்சி ஊக்குவிக்கப்படும்.

வயதாவதைத் தடுக்கும்

க்ரீன் டீயில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட், உங்களின் இளமையைப் பாதுகாக்கும். ஆகவே நீங்கள் உங்களின் இளமையைத் தக்க வைக்க நினைத்தால், தினமும் ஒரு கப் க்ரீன் டீ குடியுங்கள்.

பொலிவான சருமம்

க்ரீன் டீ குடிப்பதன் மூலம் உடலில் தங்கியுள்ள நச்சுக்கள் அனைத்தும் வெளியேறுவதால், சருமம் பொலிவோடு காணப்படும். மேலும் ஆய்வுகள் பலவும் க்ரீன் டீ குடித்து வந்தால், நல்ல பொலிவான சருமத்தைப் பெறலாம் என்று சொல்கிறது.

எத்தனை கப் க்ரீன் டீ நல்லது?

க்ரீன் குடித்தால் அழகு அதிகரிக்கும் என்று அளவுக்கு அதிகமாக குடித்தால், மோசமான விளைவை தான் சந்திக்க நேரிடும். ஆகவே அளவாக, அதாவது 2-3 கப் க்ரீன் குடித்து, அதன் முழு பயனையும் பெறுங்கள். மேலும் UMMC-யும் ஒருநாளைக்கு 2-3 கப் க்ரீன் டீ குடிப்பதையே பரிந்துரைக்கிறது.

Related posts

உங்களுக்கு அடர்த்தியான புருவம் பெற வேண்டுமா? அப்ப இத படிங்க!

nathan

நீங்கள் இத மட்டும் செய்ங்க… எவ்வளவு கருப்பா இருந்தாலும் ஒரே வாரத்துல கலராக்கிடும்…

nathan

சிவப்பழகை பெற

nathan

உலர் சருமத்திற்கு உகந்த பேஸ் பேக்

nathan

கருமையாக மாறிய சருமத்தின் நிறத்தை சரிசெய்ய சூப்பர் டிப்ஸ்…..

nathan

முல்தானி மெட்டியால் கிடைக்கும் அழகு நன்மைகள்

nathan

சருமம் எப்போதும் இளமையாக இருக்க தேங்காய்!….

sangika

முகப்பரு வர காரணம் – தடுக்கும் வழிமுறைகள் -தெரிஞ்சிக்கங்க…

nathan

கரும்புள்ளி, தோல் சுருக்கத்தை போக்கும் ஸ்டீம் முறை

nathan