கோக், தற்போதைய நவநாகரீக வாழ்வியல் முறையில் விருந்தினரை உபசரிக்க நம்மில் பெரும்பாலானோர் பயன்படுத்தும் குளிர்பானம். உண்ட உணவு செரிக்க, பார்ட்டிகள் செழிக்க என எங்கும், எதற்கெடுத்தாலும் கோக் மயம் தான்.
ஒவ்வொரு நாட்டின் பொருளாதாரத்தை வைத்து அதற்கேற்ற திறனில் தான் கோக் தயாரிக்கப்படுகிறது என்ற தகவல்கள் அரசல்புரசலாக வந்து போய்க் கொண்டிருக்கும் தருணத்தில் தான் இன்னொரு தகவலும் வந்திருக்கிறது. அதாவது, கோக் குடித்த ஒரு மணிநேரத்தில் உங்கள் உடலில் ஏற்படும் மாற்றங்கள்.
கோக் குடித்தவுடன், நிமிடத்திற்கு நிமிடம் உங்கள் உடலில் ஏற்படும் மாற்றத்திற்கு முக்கிய பங்குவகிப்பது, அதில் இருக்கும் சர்கரையின் அளவு தான். இனி, கோக் குடித்த ஒரு மணி நேரத்தில் உங்கள் உடலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து பார்க்கலாம்….
10 நிமிடங்களில் ஒரு கோக் டின் பேக் குடித்த முதல் பத்து நிமிடத்தில் அதில் இருக்கும் சர்கரையின் அளவு உங்கள் உடல் இயக்கத்தை தாக்கும். இதில் இருக்கும் பத்து டீஸ்பூன் சர்க்கரை அளவு நீங்கள் ஒரு நாள் முழுக்க எடுத்துக்கொள்ள வேண்டியது ஆகும். ஆனால், ஒரே வேளையில் நீங்கள் பருகிவிட்டு செல்கிறீர்கள்.
20 நிமிடங்களில் உங்கள் இரத்த சர்க்கரை அளவு அடாவடியாக அதிகரிக்க ஆரம்பிக்கும். உங்கள் கல்லீரல் இதை எதிர்த்து பதில் தாக்கம் செய்யும் போது அந்த சர்க்கரை கொழுப்பாக மாறுகிறதாம். அதும் ஒரு சில நிமிடங்களில்.
40 நிமிடங்களில் காப்பைஃன் அளவு முழுவதுமாக உங்கள் உடலினுள் உறிஞ்சப்பட்டிருக்கும். உங்கள் இரத்த அழுத்தம் கோக் குடிக்கும் முன்னர் இருந்த அளவை விட அதிகரித்திருக்கும். கல்லீரலின் எதிர் தாக்கத்தினால், இரத்த ஓட்டத்தில் சரக்கரையின் அளவு அதிகரித்திருக்கும். மற்றும் மூளை கொஞ்சம் மந்தமாக செயல்ப்பட ஆரம்பிக்கும்.
45 நிமிடங்களில் உங்கள் உடலில் டோபமைன் (Dopamine) அளவு மேலோங்கியிருக்கும். இதனால் உங்கள் மூளை கொஞ்சம் அலாதியான நிலையில் இயங்க ஆரம்பிக்கும். இதன் செயல்பாடு ஹெராயின் செயல்பாட்டினை போன்று இருக்கும் என்று கூறப்படுகிறது.
60 நிமிடங்களில் உங்கள் சிறுகுடலில் பாஸ்பாரிக் அமிலம் கால்சியமை, மெக்னீசியம் மற்றும் ஜிங்கை இணைக்கிறது, இதனால் உங்கள் வளர்சிதை மாற்றம் அதிகமாக தூண்டப்படுகிறது.
காப்ஃபைனின் நீர்பெருக்க பண்புகள் உங்களை சிறுநீர் கழிக்க தூண்டும்.
பற்களில் பாதிப்பு இதனால் பற்கள் மேல் இருக்கும் கோட்டிங் மெல்ல மெல்ல சிதைவு ஏற்பட்டு, பற்சிதைவு ஏற்படலாம் என்றும் கூறுகிறார்கள். பெரும்பாலும் அனைத்து குளிர் பானங்களும் இந்த பாதிப்புகளுக்கு காரணியாக இருக்கிறது.
பாக்டீரியா தாக்கம் குளிர் பானங்கள் குடிக்கும் போது நமது வாயில் 20 நொடிகளில் உருவாகும் பாக்டீரியாக்கள் 30 நிமிடங்கள் வரை ஆக்டிவாக செயல்படுகிறதாம். இதே நீங்கள் முப்பது நிமிடம் மெதுவாக அல்லது தொடர்ந்து குடிக்கும் போது, இதன் தாக்கம் அதிகரிக்கும் வாய்ப்புகள் இருக்கிறது.
பி.பி.சி-யின் ஆவணப்படம் பி.பி.சி-யின் ஆவணப்படம் ஒன்றில் இது குறித்து பேசப்பட்டுள்ளது. மற்றும் இவ்வாறான முறையில் உடலுக்குள் செல்லும் சர்க்கைரை மற்றும் கொழுப்பின் அளவு தான் மக்களுக்கு இதயம் சார்ந்த நோய்கள் அதிகரிக்க காரணம் என்றும் அவர்கள் கூறியிருக்கிறார்கள்.