உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள், டயட்டில் இருப்பவர்கள் குடிக்க வேண்டிய கஞ்சி இது. இந்த கஞ்சியை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
கொழுப்பை குறைக்கும் வாழைப்பூ சீரகக் கஞ்சி
தேவையான பொருட்கள் :
வாழைப்பூ இதழ் – 15,
இஞ்சித் துருவல் – ஒரு டீஸ்பூன்,
சீரகம் – ஒரு டீஸ்பூன்,
சீரகச்சம்பா அரிசி – கால் கப்,
பாசிப்பருப்பு – 2 டேபிள்ஸ்பூன்,
சின்ன வெங்காயம் – 6
தக்காளி – ஒன்று
கொத்தமல்லித்தழை – சிறிது,
நல்லெண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன்,
உப்பு – தேவைக்கேற்ப.
செய்முறை :
* அரிசி, பாசிப்பருப்பை நன்றாக கழுவி நீரில் ஊற வைக்கவும்.
* வாழைப்பூவை காம்பு நீக்கி, நறுக்கி மோரில் போட்டு வைக்கவும்.
* சின்ன வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* குக்கரில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் சீரகம், இஞ்சித்துருவல் போட்டு தாளித்த பின் வெங்காயம், தக்காளியை சேர்த்து வதக்கவும்.
* இரண்டும் நன்றாக வதங்கியதும் அதில் வாழைப்பூ (மோரிலிருந்து எடுத்துப் பிழிந்து) சேர்த்து வதக்கி, நீரில் ஊறவைத்த அரிசி, பாசிப்பருப்பு(நீரை வடிகட்டிவிட்டு) சேர்த்துக் கிளறவும்.
* பிறகு உப்பு, தேவையான தண்ணீர் சேர்த்து 2 விசில் வரும்வரை வேகவிட்டு இறக்கி, கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும்.
* சுடச்சுட வாழைப்பூ சீரகக் கஞ்சி.
* இந்தக் கஞ்சி உடம்பில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கும்.