1 24
மருத்துவ குறிப்பு

கையில் உள்ள திருமண ரேகை உங்கள் திருமணத்தைப் பற்றி என்ன சொல்கிறது என்று தெரிந்து கொள்ள வேண்டுமா?

ஒவ்வொருவருக்கும் தங்களது எதிர்காலத்தைப் பற்றி தெரிந்து கொள்ள ஆவல் இருக்கும். அதில் எவ்வளவு நாள் வாழப் போகிறோம் என்பதாகட்டும், தொழிலாகட்டும், திருமணமாகட்டும் அனைவரும் அதை தெரிந்து கொள்ள விரும்புவோம்.
குறிப்பாக அதில் பெரும்பாலானோர் காதல் மற்றும் திருமண வாழ்க்கைக் குறித்து தெரிந்து கொள்ள விரும்புவார்கள். இம்மாதிரியான விஷயங்களை நம்முடைய ஜாதகம், கைரேகை போன்றவை சொல்லும்.
உங்கள் திருமணம் மற்றும் திருமண வாழ்க்கை பற்றி உங்கள் கையில் உள்ள திருமண ரேகை என்ன சொல்கிறது என்று கொடுத்துள்ளது. அதைக் கொஞ்சம் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
1 24
எது திருமண ரேகை? சுண்டு விரலுக்கும், இதய ரேகைக்கும் இடையே உள்ள ரேகைகள் தான் திருமண ரேகைகள். இப்போது திருமண ரேகைகள் குறித்த சில தகவல்களைக் காண்போம்.
2 Copy 1
திருமண வயது இதய ரேகையில் இருந்து சுண்டுவிரலின் அடித்தளம் வரை 50 வருடங்களாக கருதப்படுகிறது. இதைக் கொண்டு தான் திருமணம் எந்த வயதில் நடைபெறும் என்று சொல்லப்படுகிறநது. அதாவது திருமண ரேகையானது இதய ரேகைக்கு அருகில் இருந்தால் 20 வயதிலும், நடுவில் இருவில் இருந்தால் 25-30 வயதிற்குள்ளும், சுண்டுவிரலுக்கு அருகில் இருந்தால் 35 வயதிற்கு மேலும் திருமணம் நடைபெறுமாம்
3 23
நீளம், குட்டை ரேகைகள் உங்கள் கையில் சுண்டுவிரலுக்கும், இதய ரேகைக்கும் இடையே ஒரு ரேகை நீளமாகவும், ஒரு ரேகை குட்டையாகவும் அடர்த்தியாகவும் இருந்தால், அதில் நீளமான ரேகை திருமணத்தையும், குட்டையானது காதல் முறிவையும் குறிக்கும்.
4 Copy
இரண்டு அடர்ந்த ரேகைகள் அடர்த்தியான மற்றும் ஒரே நீளமுள்ள இரண்டு திருமண ரேகைகள் இருந்தால், அத்தகையவர்களுக்கு இரண்டு திருமணம் நடைபெறும் வாய்ப்புள்ளது.
5 Copy
சுண்டுவிரலுக்கு அருகில் திருமண ரேகை சுண்டுவிரலுக்கு அருகில் இருந்து, நீங்கள் சீக்கிரமாக 20-25 வயதிலேயே திருமணம் செய்து கொண்டால், அதனால் உங்கள் திருமண வாழ்க்கை பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.
திருமண ரேகைக்கு குறுக்கே ஓர் ரேகை திருமண ரேகைக்கு குறுக்கே சிறு ரேகை சென்றால், அதுவும் திருமண வாழ்க்கையில் பிரச்சனைகள் வருவதைக் குறிக்கும். ஏன், விவாகரத்து வரை கூட கொண்டு செல்லும்.
6 Copy
நிறைய ரேகைகள் ஒருவேளை திருமண ரேகைகள் 4-5 இருந்தால், உடனே 4-5 திருமணம் ஆகுமா என்று நினைக்க வேண்டாம். இத்தகையவர்கள் மிகவும் ரொமான்டிக்கானவர்கள் மற்றும் நிறைய முறை காதலில் விழுந்து தோல்வியை சந்திப்பார்கள்.
8 9
துணையைப் பற்றியும் கூறும் திருமண ரேகைகள் எப்போது திருமணம் நடைபெறும் என்பதைப் பற்றி மட்டுமின்றி, நமக்கு துணையாக வருவோரின் ஆரோக்கியத்தைப் பற்றியும் கூறும்.
9 10
குட்டையான அல்லது நீளமான திருமண ரேகை நிறைய ரேகைகள் இருந்து அதில் திருமண ரேகை மற்ற ரேகைகளை விட நீளமாகவோ அல்லது குட்டையாகவோ இருந்தால், கலப்பு திருமணம் நடைபெறும் வாய்ப்புள்ளது என்பதைக் குறிக்கும்.
10 10
திருமண ரேகையில் கிளைகள் திருமண ரேகையின் முடிவில் கிளைகள் இருந்தால், அது உங்கள் துணை ஆரோக்கிய பிரச்சனையால் அடிக்கடி அவஸ்தைப்படக்கூடும் என்பதைக் குறிக்குமாம்.
11 8
திருமண ரேகையில் விரிசல் திருமண ரேகைக்கிடையே விரிசல் இருந்தால், அது திருமணத்திற்கு பின் சிறு பிரச்சனையால் இருவரும் சிறிது காலம் பிரிந்து இருக்கக்கூடும் என்பதைக் குறிக்கும். அதுவும் நிரந்தரமாக அல்ல, தற்காலிகமாகத் தான்.
12 6
திருமண ரேகைகள் இல்லாதது ஒருவேளை உங்களுக்கு திருமண ரேகைகள் இல்லாமலோ அல்லது அந்த ரேகை மேல் நோக்கி வளைந்து சுண்டுவிரலை தொடுமாறு இருந்தாலோ, அது வாழ்நாள் முழுவதும் சந்நியாசியாக வாழ வேண்டியதைக் குறிக்கிறது.
13 4
திருமண ரேகை கீழ் நோக்கி இருப்பது திருமண ரேகை கீழ் நோக்கி வளைந்து இருந்தால், வாழ்க்கைத்துணையைத் தேர்ந்தெடுப்பதில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அதுவே திருமணமானவருக்கு இருந்தால், அவர்கள் எந்த ஒரு பிரச்சனையையும் துணையுடன் உட்கார்ந்து பேசி தீர்த்துக் கொள்வது நல்லது. இல்லாவிட்டால் பிரிவை சந்திக்க நேரிடும்.
14 3
ஒரே ஒரு நீளமான திருமண ரேகை உங்களுக்கு ஒரே ஒரு நீளமான திருமண ரேகை இருந்தால், நீங்கள் அதிர்ஷ்டசாலிகள். உங்கள் திருமண வாழ்க்கை வாழ்நாள் முழுவதும் மிகவும் சந்தோஷமாக நீடித்து நிலைக்கும்

Related posts

மூட்டு வாதம் போக்கும், வாய்ப்புண் ஆற்றும், அம்மை நோய் தீர்க்கும்… காளான் தரும் கணக்கில்லா பலன்கள்!

nathan

உடலில் உள்ள கொழுப்பைக் கரைக்க உதவும் உணவுகள்

nathan

வெங்காயத்தை வீட்டிலேயே எளிமையாக வளர்ப்பது எப்படி?

nathan

தீக்காயங்களுக்கு……!

nathan

மலச்சிக்கலில் இருந்து விடுபட எளிய வழி

nathan

மூல நோய் பிரச்சனையில் இருந்து விடுபடணுமா?

nathan

உங்களுக்கு தெரியுமா எடையை குறைக்கும் இஞ்சி கற்றாழை ஜூஸ். எப்படி செய்வது?

nathan

அதிகாலை நேரத்தில் ரத்த சர்க்கரை அளவு அதிகமாக இருப்பது ஏன்? தெரிஞ்சிக்கங்க…

nathan

நீங்கள் தூங்கும் போது உங்கள் மூளை என்ன செய்கிறது என்று உங்களுக்கு தெரியுமா??

nathan