28.2 C
Chennai
Tuesday, Oct 1, 2024
pre 15
ஆரோக்கியம் குறிப்புகள்

குழந்தைகள் பிறந்தது முதல் சில மாதங்கள் வரை கைகளை மூடிக்கொண்டு இருப்பதேன்? தெரிந்துகொள்ளுங்கள் !

குழந்தைகள் மிகவும் மென்மையானவர்கள்; குழந்தைகள் தாயின் வயிற்றில் வளர்ச்சி அடைந்து வரும் பொழுது பல மாற்றங்கள் நிகழ்கின்றன. இந்த மாற்றங்கள் பல காரணங்களுக்காக, ஆழ்ந்த உள் அர்த்தங்கள் கொண்டே குழந்தையின் உடலில் நிகழ்கின்றன.

அந்த வகையில் குழந்தைகள் பிறந்தவுடனும் கூட இந்த மாற்றங்கள் நீடித்து, பின் சில காலங்களுக்கு பிறகு கருவறையில் ஏற்பட்ட மாற்றங்கள் மாறுதல் அடைகின்றன. இந்த பதிப்பில் குழந்தைகள் பிறந்தது முதல் ஒருசில மாதங்கள் வரை கைகளை மூடிக்கொண்டு இருப்பதேன் என்று படித்து அறியலாம்.

குழந்தைகளின் கைகள்!

குழந்தைகள் பிறந்தவுடன், அவர்களை கூர்ந்து கவனித்து உள்ளீர்களா? பிறந்த பச்சிளம் குழந்தைகள் குட்டியாக மிகவும் சிறு சிறு உடல் பாகங்களுடன், கொள்ளை அழகுடன் காட்சி அளித்து பார்ப்போரின் உள்ளங்களை கொள்ளை கொள்வர். இத்தகு அழகுடன் திகழும் குழந்தைகளில் பல அதிசயங்கள் ஒளிந்து உள்ளன.

கை மடிப்புக்கள்!

அற்புத இடமான கருவறையில் குழந்தைகள் உருவாகி வளரும் பொழுதே குழந்தைகளில் அதிசயங்கள் நடக்க தொடங்கி விடுகின்றன. அப்படி குழந்தைகளில் காணப்படும் பல ஆச்சரியமான விஷயங்களில் ஒன்றான கைமடிப்புகளை பற்றி தான் இந்த பதிப்பில் காண போகிறோம்.

குழந்தைகளின் கைகள் பிறந்தது முதல் சில மாதங்கள் வரை அவர்கள் தங்களது மடித்த கரங்களை விரிக்காமலேயே இருப்பார்கள். அதற்கு என்ன காரணம் என்னவாக இருக்கும் என்பதை இந்த பதிப்பில் காணலாம்.

கருவறையில் கூட!

குழந்தைகள் உருவாகி வளரும் இடமான கருவறையிலேயே அவர்களில் நிகழும் மாற்றங்கள் தான் பிறந்த பின்னும் நீடிக்கின்றன. குழந்தைகள் கருவறையிலேயே விரல் சூப்புவது, கைகளை மடித்து வைத்து இருப்பது போன்ற விஷயங்களை புரிவர். பிறந்த பின்னும் கூட குழந்தைகள் கருவறையில் வைத்து இருப்பது போல கைகளை மடித்து வைத்து இருப்பர்.

குழந்தைகள் ஏன் இவ்வாறு கருவறையிலும், பிறந்த பின்னும் கைகளை மடித்து வைத்து உள்ளனர் என்று என்றேனும் யோசித்தது உண்டா?

என்ன காரணம்?

குழந்தைகளின் கைகளில் இருக்கும் விரல்களின் நகங்கள் கருவறையின் சுவரை அதாவது கருவறை உறையை கிழித்து விடக்கூடும். அதனால் தான் குழந்தைகள் வயிற்றில் வளர்கையில் அவர்களின் கைகள் மடக்கிய நிலையில் இருக்கும் வண்ணம் படைக்கப்பட்டு இருக்கிறார்கள்.

இது போன்று குழந்தைகளின் கருவறை நிலையில் இருந்து பிறந்த பின் குழந்தைகளில் ஏற்படும் ஒவ்வொரு மாற்றமுமே ஒரு குறிப்பிட்ட காரணத்திற்காக தான் அமைக்கப்பட்டு படைக்கப்பட்டு உள்ளது.

 

பிறந்த பின்..!

குழந்தைகள் பிறந்த பின்னும் கூட அவர்களின் கைகள் அவ்வாறு மடக்கிய நிலையிலேயே தான் இருக்கும். இதற்கு குழந்தைகளின் கைகளில் இருக்கும் ஒருத்தி வித ஈர்ப்பு தன்மை அல்லது பால்ம் கிராஸ்ப் என்று சொல்லக்கூடிய விஷயம், செரிபெரல் பால்ஸி போன்ற காரணங்கள் காரணமாக பிறந்த பின்னும் குழந்தைகள் இந்த கைகள் மடங்கிய நிலையையே கடைபிடிக்கின்றனர்.

 

எப்பொழுது சரியாகும்?

குழந்தைகளின் மடங்கிய நிலையில் இருக்கும் கையை என்ன தான் நாமே பிரித்து விட்டால் தான் அவை பிரியும். ஆனால் 3 அல்லது 4 மாதங்களுக்கு பிறகு அவர்களின் கைகள் தானாகவே விரிந்து பொருட்களை பொம்மைகளை பிடிக்க முயலும்.

மேலும் குழந்தைகளின் நினைவு சற்று விரிந்து, பெற்றோர் முகத்தை உற்று நோக்கும் பொழுது, பொம்மைகளை பார்த்து அவைகளை பற்ற நினைக்கும் பொழுது அவர்களின் கை தானாகவே விரிந்து செயல்பட தொடங்கும்.

கைகள் மடங்கவில்லை எனில்..

குழந்தைகளின் கைகள் மடங்கிய நிலையில் இல்லை எனில், அவர்தம் தாய்மார்களின் கருவறையில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டு இருக்கலாம்; அதனால் குழந்தைகளின் தாய்மார்கள் கருவறையை பரிசோதனை செய்து அதன் நிலை பற்றி அறிதல் அவசியம். மேலும் குழந்தையின் உடலில் ஏன் இந்த வித்தியாசம் என்றும் குழந்தையின் பெற்றோர் மருத்துவர்களிடம் கேட்டு அறிதல் அவசியம்.

Related posts

இந்த ராசிக்காரங்க மிகவும் மோசமான கணவன்/மனைவியாக இருப்பாங்களாம்…

nathan

நம்முடைய வயிற்றைச் சுத்தம் செய்வது எப்படி?

nathan

சூப்பர் டிப்ஸ்! காலையில் எழுந்த உடன் இதை குடிக்காதிங்க!

nathan

தாய்ப்பால் குழந்தைகள் குடிக்கும்போது மார்பகத்தை ஏன் கடிக்கிறார்கள் தெரியுமா?

nathan

செரிமான கோளாறுகள் ஏற்படுவதற்கான காரணங்களும் தீர்வுகளும்…!!

sangika

நாப்கினுக்கு குட்பை!

nathan

பொதுவாக இந்த வைட்டமின் பி12 குறைபாடு உள்ளது என்பதை வெளிக்காட்டும் அறிகுறிகள்!

nathan

உங்களுக்கு தெரியுமா ரத்தத்தில் உள்ள அதிகப்படியான கழிவுகளை நீக்கும் கற்பூரவள்ளி…!!

nathan

ஏழு நாட்கள் தொடர்ந்து தேங்காய் தண்ணீர் குடித்தால் நிகழும் மாற்றங்கள் என்னவென்று தெரியுமா!

nathan