குங்குமப்பூவை உரசி ஒரு டேபிள் ஸ்பூன் தண்ணீர் விட்டு சிறிது நேரம் ஊற விடவும்.
குங்குமபூவின் நிறம் முழுக்க நீரில் ஊறியதும் சிறிது வெண்ணெய் கலந்து நன்றாக குழைக்கவும். இந்த கலவையை தினமும் முகத்திலும், உதடுகளிலும் பூசிவர உதடுகள் நிறம் மாறும்.
உதடுகளில் வறட்சி இருந்த இடம் தெரியாமல் ஓடி விடும். முகத்தில் உள்ள கரும்புள்ளிகளும் மறைந்து விடும்.
நகங்களில் நகச்சுத்தி வந்து அழுகிப் போன நகங்கள் மற்றும் உடைந்து போன நகங்களை குங்குமப்பூ வெண்ணை கலவையானது சீர்படுத்தி இழந்த அழகை மீட்டுத்தருகிறது.
நம் எல்லோரின் முகத்திற்கும் வசீகரத்தை தருவது கவர்ச்சி மிகு கண்கள்தான் அந்த கண்களுக்கு பளிச் அழகைத் தருவது அடர்த்தியான இமைகள் பட்டாம்பூச்சி போல படபடக்கும் இமைகள் அமைய குங்குமப்பூ உதவுகிறது.
ஒருசிலருக்கு பாலின் வாடை பிடிக்காது. இப்படிப்பட்டவர்களுக்கு மசக்கை நேரத்தில், இன்னும் அதிகமாக வயிற்றைப் புரட்டும்.
அதனால்தான் மாறுதலான மணம் மற்றும் சுவைக்காக குங்குமப்பூவை பாலில் கரைத்துக் குடிக்கும் பழக்கம் வந்துள்ளது.