இப்போதெல்லாம் சூரிய விடியலை யூ-டுயூபில் (Youtube) மட்டும் தான் பார்க்க முடிகிறது. ஷிஃட்டு வேலைகள், நள்ளிரவு வரை ஸ்மார்ட் ஃபோனேடானா உரசி உறவாடுதல் போன்றவை உங்கள் இரவை சூழ்ந்துக் கொண்டு உடல் நலத்தை கெடுக்கின்றது. இதனால், காலை சூரியன் மூஞ்சியில் வெப்பத்தை ஓங்கி அறையும் வரை தூங்கிக் கொண்டிருக்கிறோம்.
உண்மையில் அதிகாலை எழுவதனால், உங்கள் உடல்நலத்திற்கு நிறைய நன்மைகள் ஏற்படுகின்றன. அதிகாலை எழுந்திரிக்க வேண்டும் என்றவுடன், மீண்டும் கைப்பேசியும் கையுமாக அதிகாலையிலேயே ஃபேஸ் புக்கில், “It is amazing.. I woke up earlier, feeling fresh” என்று ஸ்டேடஸ் போடுவதற்கு அல்ல.
அதிகாலை சூரிய ஒளி உங்கள் உடலில்படுவது மிகவும் நல்லது, இது உங்கள் உடலை புத்துணர்ச்சி ஆக்கும். அந்த வேளையில் யோகா, நடைப்பயிற்சி போன்றவற்றை மேற்கொள்வது உங்களுக்கு நிறைய உடலநல நன்மைகளை விளைவிக்கும்….
புத்துணர்ச்சி
நீங்கள் அதிகாலை எழுவதனால், உங்கள் நாளும், உடலும் மிகவும் புத்துணர்ச்சியாக தொடங்கும். இது, உங்கள் நாள் சோர்வின்றி தொடங்க பயனளிக்கும்.
யோகா / நடைப்பயிற்சி
யோகா செய்வதற்கும், நடைப்பயிற்சி செய்வதற்கும் உகந்த நேரம் அதிகாலை தான். மற்ற நேரங்களை விட அதிகாலை சூரிய உதயத்தின் போது இப்பயிற்சிகளில் ஈடுப்படுவது நல்லது.
மன அழுத்தம் குறையும்
அதிகாலையே எழுந்து உங்கள் நாளை துவக்குவதனால், அவசரம் இன்றி வேலைகளை பார்க்க முடியும். அதனால், உங்களுக்கு மன அழுத்தம் குறையும்.
அமைதியான நாள்
பெரும்பாலும் காலை எழும்போது உங்கள் மூளையும், உடலும் அமைதியான சூழலில் இருந்தால், செயல்திறன் அதிகரிக்கும். எனவே, அதிகாலை எழும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்வது உங்கள் உடலுக்கும், மனதிற்கும் நன்மை விளைவிக்கும்.
நினைவாற்றல்
அதிகாலை எழுந்து படிப்பதனால் உங்கள் நினைவாற்றல் அதிகரிக்கிறது. மாணவர்கள் மட்டுமல்ல வேலைக்கு செல்வோர்கள் கூட உங்கள் வேலையை அதிகாலை தொடங்கினால், உங்கள் வேலையில் நல்ல பலனை பெற முடியும்.
நல்ல உறக்கம்
அதிகாலை எழும் பழக்கம் உங்களுக்கு இரவில் நல்ல உறக்கைத்தை தரவல்லது. எனவே, முடிந்த வரை அதிகாலையில் எழுந்து இரவு பத்து மணிக்குள் உறங்கும்படி உங்கள் நாளை வகுத்துக் கொள்ளுங்கள்.