உங்கள் ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கவழக்கத்தால் வயிறு பானை போன்று வீங்கிவிட்டதா? இதுவரை நீங்கள் விரும்பி அணிந்து வந்த உடை இறுக்கமாகிவிட்டதா? உங்களுக்கு பிடித்த சட்டையின் பட்டனைப் போட முடியவில்லையா? கவலையை விடுங்கள்.
தற்போது தொப்பை பலருக்கும் பல்வேறு சிரமத்தைக் கொடுக்கிறது. ஒருவருக்கு தொப்பை வர ஆரம்பித்து விட்டால், அதனை ஆரம்பத்திலேயே குறைக்க முயற்சிக்க வேண்டும். பெரிதான பின் முயற்சித்தால், அதைக் குறைப்பது என்பது மிகவும் கடினமாகிவிடும்.
தொப்பையை எப்படி எளிய வழியில் குறைப்பது என்று கேட்கிறீர்களா? அதற்கு சரியான டயட்டுடன், போதிய உடற்பயிற்சிகளை மேற்கொள்வதோடு, கீழே கொடுக்கப்பட்டுள்ள அற்புத ஜூஸை தினமும் ஒரு டம்ளர் குடித்து வாருங்கள்.
அவகேடோ/வெண்ணெய் பழம்
வெண்ணெய் பழத்தில் உடலுக்கு வேண்டிய ஏராளமான வைட்டமின்களும், கனிமச்சத்துக்களும் அடங்கியுள்ளது. மேலும் அவகேடோ பழம் உடலின் மெட்டபாலிச அளவை அதிகரித்து, கொழுப்புக்கள் வேகமாக கரைய உதவும். அதுமட்டுமின்றி அவகேடோ பழம் கொழுப்புச் செல்களைக் கரைக்க உதவும் ஹார்மோன்களின் உற்பத்தியைத் தூண்டும்.
இஞ்சி
இஞ்சி உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து, கொழுப்புக்களை வேகமாக கரைக்கும். ஆகவே உணவில் அடிக்கடி இஞ்சியை அதிகம் சேர்த்து உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புக்களின் தேக்கத்தைக் குறையுங்கள்.
புதினா
புதினா குளிர்ச்சிமிக்க ஓர் மூலிகை. இது பசியைக் குறைத்து, உடல் எடை வேகமாக குறைய உதவும். மேலும் இது உடலை குளிர்ச்சியுடனும் வைத்துக் கொள்ளும்.
எலுமிச்சை
எலுமிச்சையில் உள்ள அமிலத்தன்மை, வயிற்றைச் சுற்றியுள்ள கொழுப்பு படலத்தைக் கரைத்து, தொப்பையின் அளவை வேகமாக குறைய வழி செய்யும்.
தேவையான பொருட்கள்:
அவகேடோ/வெண்ணெய் பழம் – 1 இஞ்சி – 1/4 கப் புதினா – 1/4 கப் எலுமிச்சை சாறு – 2 டேபிள் ஸ்பூன் தேன் – தேவையான அளவு
செய்முறை:
முதலில் வெண்ணெய் பழத்தின் சதைப்பகுதியை எடுத்து, மிக்ஸியில் போட்டு, அத்துடன் புதினா, இஞ்சி, எலுமிச்சை சாறு ஆகியவற்றை சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். பின் அதில் வேண்டுமானால் தேன் கலந்து கொள்ளலாம். இல்லாவிட்டால் அப்படியே பருகலாம்.
பருகும் நேரம்
இந்த ஜூஸை தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் பருகுவது நல்ல பலனைத் தரும்.