23.7 C
Chennai
Wednesday, Dec 18, 2024
43902431 3449 4fe0 b32d 461a3d06680e S secvpf
மருத்துவ குறிப்பு

காதலில் ஏமாற்று பேர்வழிகளை கண்டுபிடிப்பது எப்படி

ஆண், பெண் இருவரும் மிக மிக எச்சரிக்கையாக அணுக வேண்டியது இப்படிப்பட்ட ஏமாற்று நபர்களைத்தான். காதல் என்பதை ஒரு தொழில் மாதிரி மிகச் சிறப்பாக, கச்சிதமாக செய்வார்கள்.

இவர்களது நோக்கம் பணம், செக்ஸ் அல்லது பொழுதுபோக்கு இவையாகத்தான் இருக்கும். குறிப்பிட்ட நிலை வந்ததும் தப்பித்துவிட வேண்டும் என்ற முடிவெடுத்து காதலில் இவர்கள் இறங்குவதால் மிகப் பக்குவமாக இருப்பார்கள்.

இப்படிப்பட்டவர்களிடம் இருந்து தப்பிக்க இரண்டே வழிகள்தான் உள்ளன. இரண்டுமே அவர்களது பலகீனமே.

அதாவது, பொய் மற்றும் நண்பர்கள்.

இந்த இரண்டில் தெளிவாக இருந்தால் இப்படிப்பட்டவர்களை கண்டறிந்து தவிர்த்துவிடலாம்.

இவர்கள் கூசாமல் நிறைய பொய் சொல்வார்கள். முன்னர் சொன்ன பொய்யை, அப்படிச் சொல்லவே இல்லை என்று சாதிப்பார்கள்.

அடிக்கடி மாற்றி மாற்றிப் பேசுவார்கள். கண்டுபிடித்துக் கேட்டால், அதை ஒரு குற்றம் மாதிரி எடுத்துக் கொள்ளாமல் ஏதாவது பரிசு கொடுத்து அல்லது மீண்டும் சில பொய்கள் சொல்லி சமாளிப்பார்கள். பொய்கள் எண்ணிக்கை உயரும் பொழுது கொஞ்சம் சுதாரித்துக் கொண்டால் இவர்களது நோக்கத்தினை மிகத் தெளிவாக அறிந்துகொள்ள முடியும்.

இவர்கள் நட்பு என எவரையும் அறிமுகப்படுத்த மாட்டார்கள். நீங்கள் யாரையாவது அறிமுகப்படுத்த விரும்பினாலும் சாமர்த்தியமாக தட்டிக் கழிப்பார்கள்.

மிக புத்திசாலித்தனமாக நடப்பவர்கள் ஆரம்பம் முதல் கடைசி வரை ஒன்று அல்லது இரண்டு நண்பர்களை மட்டும் நாடகத்தின் ஒரு பகுதியாக அறிமுகப்படுத்துவார்கள். இவர்கள் ஏதாவது பிரச்சனைகள் தோன்றும் நேரங்களில் மட்டும் ஆஜராகி மிக அற்புதமாக அவற்றைத் தீர்த்துவிட்டு விலகுவார்கள்.

அம்மாவிடம் இந்த வாரம் கூட்டிப் போகிறேன் என மிக உறுதியாக வாக்குறுதி கொடுப்பார்கள். கடைசி சில நிமிடங்களில் உடல் நலம் சரியில்லை, ஊருக்குப் போய்விட்டார்கள் என நடிப்பார்கள்.

அவர்கள் எதிர்பார்ப்பது செக்ஸ் என்றால், அதனை அனுபவித்த பின்னர் விலகுவார்கள் அல்லது சுய ரூபத்தைக் காட்டி செக்ஸ் டார்ச்சர் கொடுப்பார்கள். பணம் அல்லது சொத்து என்றால் அவசரக் கல்யாணம் வரை போவார்கள்.

பெற்றோர்கள் சம்மதம் கிடைக்கவில்லை என்று நாடகமாடுவார்கள். திருமணத்திற்குப் பின் தேவையானதை சுருட்டிக்கொண்டு ஓடுவார்கள். அல்லது காதல் வேண்டாம் காசு வேண்டும் என சுய ரூபத்தைக் காட்டுவார்கள்.

இப்படிப்பட்ட நபர்களும் நம் சமூகத்தில் கலந்து இருப்பதால் இவர்களை அடையாளம் கண்டு விலக வேண்டியது மிக முக்கியம்.43902431 3449 4fe0 b32d 461a3d06680e S secvpf

Related posts

சூப்பர் டிப்ஸ்! வயிற்று எரிச்சலால் அவதியா? அப்போ இவற்றில் ஒன்றை ட்ரை பண்ணுங்க

nathan

தெரிஞ்சிக்கங்க…அவசியம் தவிர்க்க வேண்டிய ஆபத்தான 7 பாட்டி வைத்தியங்கள்!!!

nathan

மூன்று வகையான கல்லீரல் நோய்களும்… அதை சரிசெய்யும் சில கை வைத்தியங்களும்…இதை படிங்க…

nathan

பெண்களை தாக்கும் சினைப்பை புற்றுநோய்: தடுப்பது எப்படி?கட்டாயம் இதை படியுங்கள்

nathan

மருத்துவர் கூறும் தகவல்கள்! தோள்பட்டை வலி அதிகமா இருக்கா? அதிலிருந்து விடுபட இதோ சில எளிய இயற்கை வழிகள்!

nathan

மெத்தையை விட கட்டாந்தரையில் படுப்பது ஏன் ஆரோக்கியமானது என்று தெரியுமா?

nathan

3 வகையான உடல்வாகு கொண்ட மனிதர்கள்

nathan

இத தினமும் ஒரு டேபிள் ஸ்பூன் எடுத்தா பற்களின் பின் உள்ள மஞ்சள் கறைகள் நீங்கும்!

nathan

உங்களுக்கு தெருயுமா வயிற்றில் கொழுப்பை தங்கி தொப்பையை உண்டாக்கும் 12 பழக்கவழக்கங்கள்!!!

nathan