24.1 C
Chennai
Sunday, Dec 15, 2024
kayal
அழகு குறிப்புகள்கண்கள் பராமரிப்பு

காஜலை சரியாக நீக்குவதற்கு ஒரு சில டிப்ஸ்!

பெண்கள் அழகுக்காக பயன்படுத்தும் பொருட்களில் ஒன்று தான் காஜல். அவ்வாறு தினமும் காஜலைப் பயன்படுத்தும் பெண்கள் ஒரு நாள் அதனை பயன்படுத்தவில்லை என்றாலும், பார்க்க ஏதோ ஒன்று குறைந்தது போல் காணப்படுவர். அதிலும் காஜல் நிறைய வகையில் தற்போது கடைகளில் விற்கப்படுகின்றன.

மேலும் அந்த காஜலை வீட்டிலே கூட தயாரிக்கலாம் அல்லது காஸ்மெடிக்ஸ் கடைகளில் வாங்கலாம்.

தற்போது அவ்வாறு காஜலைப் பயன்படுத்தும் பெண்களுக்கு இருக்கும் ஒரு பிரச்சனை தான், கண்களுக்கு போடும் காஜல் கலைந்துவிட்டு, முக அழகை கெடுத்துவிடுகின்றன.

அதனாலேயே நிறைய பெண்களுக்கு கருவளையம் வந்துவிட்டது போன்று காணப்படுகிறது.

சிலசமயங்களில் அந்த காஜலை போட்டவர்கள் சரியாக அதனை நீக்காமல் இருப்பதும் கருவளையத்திற்கு காரணம்.

ஆகவே அத்தகைய காஜலை சரியாக நீக்குவதற்கு ஒரு சில டிப்ஸ் இருக்கிறது. அவை இதோ……

* தினமும் முகத்தை கிளின்சிங் மில்க்கை வைத்து கழுவ வேண்டும். இதுவும் மேக்கப்பில் ஒரு வித பகுதி தான். kayal

அதிலும் முகத்திற்கு என்னதான் மேக்கப் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ போட்டாலும், கிளின்சிங் மில்க்கால் கழுவ வேண்டும்.

அதிலும் காஜலை எளிதாக நீக்குவதற்கு, கிளின்சிங் மில்க்கை முகத்திற்கு தடவி, முகம் மற்றும் கண்களுக்கு நன்கு மசாஜ் செய்ய வேண்டும். பின் அதனை ஒரு காட்டனை வைத்து, துடைத்து எடுக்க வேண்டும்.

இதனால் முகத்தில் இருக்கும் காஜல் வருவதோடு, அழுக்குகளும் வந்துவிடும். இல்லையெனில் மேக்கப் ரிமூவல் க்ரீம் என்று விற்கப்படும் கிரீமையும் பயன்படுத்தி நீக்கலாம்.

* காஜல் பயன்படுத்தியதால் ஏற்படும் கருவளையத்தை தடுப்பதற்கு, தினமும் படுப்பதற்கு முன், எண்ணெயை வைத்து நன்கு மசாஜ் செய்து, தூங்க வேண்டும்.

அவ்வாறு மசாஜ் செய்ய பயன்படுத்தும் எண்ணெய் ஆலிவ் அல்லது ஆமணக்கெண்ணெயை பயன்படுத்தினால் நல்லது.

இவ்வாறு எண்ணெயை பயன்படுத்தினால், கண் இமைகள் நன்கு வளர்வதோடு, காஜலும் எளிதில் நீங்கும். வேண்டுமென்றால், எண்ணெயை பயன்படுத்தி மசாஜ் செய்ததும், ஒரு காட்டனை வைத்து துடைத்துவிட்டு, பின் ஃபேஸ் வாஷை பயன்படுத்தலாம்.

* வாஸ்லினை பயன்படுத்தி கண்களுக்கு அடியில் சிறிது நேரம் மசாஜ் செய்து, பின்னர் காட்டனை வைத்து, துடைக்க வேண்டும். இதனால் காஜல் எளிதில் நீங்கிவிடும்.

ஆகவே மேற்கூறியவாறெல்லாம் செய்தால், காஜல் எளிதில் நீங்குவதோடு, கருவளையம் ஏற்படாமலும் இருக்கும்.

Related posts

தெரிந்துகொள்வோமா? நல்லெண்ணெய் குளியல்

nathan

தெறி பேபி! மீனா மகளின் பிறந்த நாள் கொண்டாட்ட புகைப்படங்கள் ..!!!

nathan

உப்பு தண்ணீரில் குளிப்பதால் கிடைக்கும் 10 நன்மைகள்!!!

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…சென்ஸிட்டிவ் கண்களுக்கான மேக்கப் டிப்ஸ்!! | Tamil Beauty Tips

nathan

சிவப்பழகு ஸ்க்ரப்

nathan

இதனை தினமும் செய்து வந்தால், முகத்தில் சேரும் அழுக்குகள் உடனே நீங்கும்.

nathan

மு‌க‌த்‌தி‌ல் ஏ‌ற்படு‌ம் ‌பிர‌ச்‌சினைகளு‌ம் ‌தீ‌ர்வுகளு‌ம்

nathan

கசிந்த புகைபடம் ! நடிகை காஜல் அகர்வாலுடன் இரவு பார்ட்டியில் கூத்தடித்த அனுஷ்கா !

nathan

மனிதனுக்கு பன்றி இதயம் பொருத்தி சாதனை!

nathan