27 C
Chennai
Thursday, Dec 19, 2024
1479277469 7534
சைவம்

கலவை காய்கறி மசாலா

தேவையான பொருட்கள்:

காரட் – 100 கிராம்
உருளை – 150 கிராம்
காலிஃப்ளவர் – ஒன்று
பச்சை மொச்சை – 200 கிராம்
வெங்காயம் – 150 கிராம்
தக்காளி – 150 கிராம்
சோம்பு – ஒரு தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது – ஒரு தேக்கரண்டி
பச்சை மிளகாய் – 2
எண்ணெய் – ஒரு மேசைக்கரண்டி

அரைக்க தேவையான பொருட்கள்:

காய்ந்த மிளகாய் – 4
வெந்தயம் – ஒரு தேக்கரண்டி
சோம்பு – ஒரு தேக்கரண்டி
மிளகு – ஒரு தேக்கரண்டி
ஏலக்காய் – 2
பட்டை – 2
கிராம்பு – 2
கறிவேப்பிலை – ஒரு இணுக்கு

1479277469 7534

செய்முறை:

அரைக்க கொடுத்துள்ளதை எண்ணெய் இல்லாமல் வறுத்து பொடியாக தண்ணீர் இல்லாமல் அரைத்து வைக்கவும். எண்ணெய் சூடானதும் சோம்பு போடவும். பொரிந்தவுடன் வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கி இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும்.

வாசனை போகும் வரை வதக்கி வேகவைத்துள்ள காய்கறிகளை சேர்த்து அரைத்துவைத்துள்ள மசாலாவையும் சேர்த்து வதக்கவும். மசாலா காய்கறியில் நன்கு பரவியதும் இறக்கி பரிமாறவும்.

Related posts

குதிரைவாலி அரிசி பிரியாணி

nathan

காலிஃப்ளவர் – பட்டாணி குழம்பு

nathan

தட்டைப்பயறு கிரேவி

nathan

சுவையான காலிபிளவர் – பட்டாணி குருமா

nathan

உருளைக்கிழங்கு பீன்ஸ் பொரியல்

nathan

வெஜிடேபிள் தம் பிரியாணி

nathan

கோவைக்காய் சாதம்|kovakkai sadam

nathan

சூப்பரான சுரைக்காய் சப்ஜி

nathan

தக்காளி பட்டாணி சாதம்

nathan