கறிவேப்பிலைப் பொடி
தேவையானவை:
1. பச்சை கறிவேப்பிலை – உருவியது 4 கோப்பை
2. உளுத்தம் பருப்பு – 1 கோப்பை
3. கடலைப்பருப்பு அல்லது துவரம்பருப்பு – கால் கோப்பை
4. பெருங்காயம் – 1 துண்டு
5. மிளகாய் வற்றல் – 16
6. கொப்பரை – துருவியது கால் கோப்பை
7. வெல்லம் – உதிர்த்தது 1 மேசைக்கரண்டி
8. புளி – எலுமிச்சம்பழ அளவு
9. கடுகு – ஒரு கரண்டி
செய்முறை:
1. கறிவேப்பிலையை உருவி நன்றாக கழுவி உலரவிடவும்
2. கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, மிளகாய் வற்றல் இவற்றையும் தனித்தனியாக வறுக்கவும்.
3. பிறகு சிறிதளவு எண்ணெய் விட்டு காய்ந்தவுடன் கடுகு தாளித்து அதிலேயே பெருங்காயத்தைப் பொடிக்கவும்.
4. கொப்பரையை இலேசாக வறுக்கவும். கொப்பரை அவசியம் என்பதில்லை. உருசிக்காக மட்டுமே சேர்க்கப்படுகின்றது.
5. முதலில் கறிவேப்பிலையை பொடித்து வைக்கவும்.
6. பருப்புக்கள், மிளகாய், தாளித்த கடுகு, பெருங்காயம் இவைகளை திட்டமாக உப்பு சேர்த்து பொடிக்கவும்.
7. பொடித்த கறிவேப்பிலையை சேர்த்து நன்றாக கலந்து, உதிர்த்த வெல்லம், கொப்பரை இவைகளை கலந்து மறுபடி பொடித்து, ஒன்றாக கலந்து எடுத்து வைக்கவும்.
பி.கு: கறிவேப்பிலையை வறுக்காமலும் செய்யலாம்.
Related posts
Click to comment