கர்ப்ப காலம் ஒரு பெண்ணிற்கு மிகவும் வித்தியாசமான அதே வேளையில் வாழ்கையைப் மாற்றிப் போடக்கூடிய கால கட்டமாகும். சில வல்லுனர்கள் கூறுவதைப் போல சில பெண்களுக்கு இது ஒரு புத்தக அறிவைப் போன்று எளிதாக இருப்பினும், பலருக்கு இது ஒரு துரதிர்ஷ்டமான காலகட்டம்.
காலைப் பொழுதின் சுகவீனம், பிடிப்புகள், பின்புற வலி, வாந்தி, மயக்கம் மற்றும் கால் வீக்கம் ஆகியவை கர்ப்பத்தின் போது காணப்படும் பொதுவான அறிகுறிகளாக இருந்தாலும், இன்னும் பல சிக்கல்களையும் இவ்வேளைகளில் எதிர்பார்க்கலாம்.
எக்டோபிக் பிரெக்னன்சி (Ectopic Pregnancy)
எக்டோபிக் பிரெக்னன்சி எனப்படும் ஒரு சிக்கல் கருமுட்டை கருப்பையிலிருந்து வெளியில் வளர்வதைக் குறிக்கும். பொதுவாக இது பாலோப்பியன் குழாயில் நடைபெறும். மகப்பேறு மருத்துவர்கள் இதை முதற்கட்டத்திலேயே கண்டறிவது நல்லது எனவும், தவறினால் கருவானது பாலோப்பியன் குழாயை உடையச் செய்து உள் ரத்தப்போக்கை ஏற்படுத்தி, அதன் மூலம் உங்களுக்கும், உங்கள் குழந்தைக்கும் பல்வேறு சிக்கல்களுக்கு வழிவகுக்கும் எனவும் தெரிவிக்கின்றனர். பொதுவாக இச்சூழலில் கருச்சிதைவு ஏற்படுவது வழக்கம்.
ப்ரீக்லாம்சியா (preeclampsia)
உலகம் முழுவதும் ஆண்டுதோறும் தாய்மார்களுக்கு ஏற்படும் மற்றுமொரு பொதுவான கர்ப்பகாலப் பிரச்சனை ப்ரீக்லாம்சியா எனப்படும் ஒரு குறைபாடு. இந்த பிரச்சனையை அவர்களின் சிறுநீரைப் பரிசோதித்து அதில் அதிகமாகக் காணப்படும் புரோட்டீன் அளவை அறிவதன் மூலம் அல்லது மிக உயர் ரத்த அழுத்தம் ஆகியவற்றின் மூலமும் அறியமுடியும். இந்த அறிகுறிகள் கர்ப்ப காலத்தின் மூன்றாம் பருவத்தில் கருவுற்ற பெண்களிடம் காணப்படுவதுடன், அவர்களை கர்ப்பத்தின் இறுதி நாட்கள் வரை கவனமாக கண்காணித்து வருவதன் மூலம் சுகப்பிரசவமாக அது வழிவகுக்கும்.
கர்ப்பகால நீரிழிவு (Gestational Diabetes)
இவை அல்லாது கருவுற்று இருக்கும் போது நீரழிவு நோய் ஏற்படும் நிலை தற்போது அதிகரித்து வருகிறது. இதனால் தான் மருத்துவர்கள் கர்ப்ப காலத்தின் இரண்டாவது கட்டத்தில் கண்டிப்பாக சர்க்கரையின் அளவை சோதிக்கின்றனர். ரத்தத்தில் சர்கரையின் அளவை கண்காணிக்க வேண்டியது கருவுற்ற பெண்களுக்கு மிகவும் அவசியம். நல்ல சத்தான ஆரோக்கியமான உணவுகளை சரியான அளவுகளில் உண்பதன் மூலமும், உடற்பயிற்சியின் மூலமும், இதை சரிசெய்ய முடியும். இருவருக்குச் சாப்பிடுவதாக நினைத்து அஜாக்கிரையாக இல்லாமல் சற்று முன்னெச்சரிக்கையுடன் உடற்பயிற்சி செய்வது நல்லது.
நஞ்சுக்கொடி கீழிறங்குதல் (Placenta Previa)
சில பெண்களுக்கு நஞ்சுக்கொடி கீழிறங்கி கருப்பைக்கு அடியில் அமைந்துவிடுவதுண்டு. இது கவனிக்கப்படாமல் விட்டால் இரத்தக்கசிவு ஏற்பட்டு மேலும் சிக்கலுக்கு வழிவகுக்கும். அதனால் தாய்மார்களே நீங்க கவனமா இருங்க…